சென்னை: ஆதார் கார்டு பான், கார்டு முதலீட்டு திட்டங்களுக்கும் பேங்க் பரிவர்த்தனைக்கு மட்டுமில்லங்க.. நீங்க நகை வாங்கினால் கூட இந்த ஆவணங்கள் தேவைப்படலாம் எப்படி என்று கேட்கிறீர்களா வாங்க தெளிவா பார்ப்போம்
தங்க நகை வாங்குவது இந்தியாவில் மங்களகரமான ஒன்றாக உள்ளது. இருந்தாலும் நகை வாங்குவதற்கு முன்பு, சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பணத்தை பயன்படுத்தி வாங்கும் போது. இதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம்.. ஆனால் இங்கு தான் பிரச்சனையே.. எப்படி அரசு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்கிறதோ, அதேபோல நீங்கள் தங்கத்தை வாங்கும் போதும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தொகையாக கொடுத்து வாங்க முடியாது. அப்படி வாங்கினால் அதற்கு பான் மற்றும் ஆதார் அவசியம். நகைகளை வாங்குவதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி, பண மோசடி தடுப்புச் சட்டம் (PMLA) 2002 இன் கீழ் நகைகள், ரத்தினங்கள், வைரங்கள் போன்ற எந்த நகை வாங்க வேண்டுமானாலும் அதற்கு அரசாங்க விதிகளைப் பின்பற்ற வேண்டும். டிசம்பர் 28ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு அன்று அறிவிக்கப்பட்ட, இந்த நடவடிக்கையின் படி நகை வியாபாரிகள் KYC விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் ரொக்கப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் பான் அல்லது ஆதார் விவரங்களைக் கேட்க வேண்டும் மற்றும் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை செய்யும் போது அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது.
கூடுதலாக, சமீபத்திய ஆண்டுகளில் வருமான வரிச் சட்டம் 1961-இன் கீழ் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதில் தனி நபரின் அதிகபட்ச பணப்பரிவர்த்தனை போன்றவை அடங்கும்.
1962-இன் வருமான வரி விதி 114B இன் படி, ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்கம் வாங்குவதற்கு பான் விவரங்களை வழங்குவது கட்டாயம் என்று கைதான் & கோ என்ற சட்ட நிறுவனத்தின் பார்ட்னரான Stuti Galiya கூறுகிறார். ஒரே பரிவர்த்தனையில் ரூ. 2 லட்சத்திற்கு மேல், அதனை நீங்கள் எப்படிச் செலுத்தினாலும் (பணம் அல்லது டிஜிட்டல் பேமெண்ட்) உங்கள் பான் விவரங்களை நகைக்கடைக்காரர்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒருவரிடம் இருந்து வரக்கூடிய பணம் சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால் மட்டுமே, இதுபோன்ற சில நடவடிக்கைகளை நகைக்கடைக்காரர்கள் எடுக்கின்றனர். இது தவிர கூடுதலாக சில நகைக்கடைக்காரர்கள், வாடிக்கையாளர் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு என்று யுக்திகளையும் வைத்துள்ளனர் என்று Galiya கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications