நம்ம ஊர்ல பொதுவாக வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் விலை (கிலோவுக்கு) ரூ.40 முதல் ரூ.100 வரை இருக்கும். தட்டுப்பாடு வந்தால் மட்டுமே அவற்றின் விலை எகிறும். இந்தியாவில் காய்கறிகளிலேயே விலை உயர்ந்த காய்கறி எது என்று உங்களுக்கு தெரியுமா?.
நிச்சயமாக தக்காளியோ அல்லது வெங்காயமோ இல்லை. மேலும் நம்ம தமிழ் நாட்டு காய்கறியும் இல்லை. கேர் சங்ரி என்ற காய்கறிதான் இந்தியாவின் விலையுயர்ந்த காய்கறி என்று சொல்கிறார்கள். இந்த காய்கறி ராஜஸ்தானை சேர்ந்தது.

முதல்ல இந்த ராஜஸ்தான் காய்கறி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கேர் சங்ரி 10 நாட்கள் வரை அப்படியே ப்ரெஷா இருக்குமாம். ராஜஸ்தானில் குளிர்காலத்தில் இந்த காய்கறியை அங்குள்ள மக்கள் சமையல்களில் பயன்படுத்துகிறார்கள்.
தினமும் காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளின் போது ஊறுகாய் மாதிரியோ அல்லது தொடு கறி மாதிரியோ கேர் சங்ரியில் செய்யப்பட்ட உணவை உணவில் சேர்த்து சாப்பிடுவார்கள். பொதுவாக தினை பிளாட் ரொட்டியுடன் சேர்த்து இதனை சாப்பிடுகிறார்கள்.
பிரபலமான உணவு கன்டென்ட் கிரியேட்டரும், இன்ஸ்டாகிராம் பயனாளருமான ஒருவர் இன்ஸ்டாகிராமில் இந்தியாவின் விலையுயர்ந்து காய்கறி என்று தலைப்பிட்டு, ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஜாடோன் தானி உணவகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், கேர் சங்ரி சப்ஜியின் தயாரிப்பின் படிப்படியான செயல்விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோவில், மசாலா பொருட்களை சேர்ப்பது மற்றும் துல்லியமான சமையல் செயல்முறையை காட்டப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு பயனர், ராஜஸ்தானி உணவு உலகிலேயே சிறந்தது என்று பதிவு செய்து இருந்தார். மற்றொருவர், இது சிறந்த சப்ஜி, நீங்கள் விதைகளை நடத் தேவையில்லை அவை தானா வளர்கின்றன. ஆனால் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000 முதல் 1,500 வரை விற்கப்படுகிறது என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
அந்த வீடியோவை குறிப்பிட்டு, கேங் சங்ரியை இந்தியாவின் விலையுயர்ந்த காய்கறி என்று பலர் சொல்லும் அதேவேளையில், இமாச்சல பிரதேசத்தில் குச்சி காளான் தான் இந்தியாவின் விலையுயர்ந்த காய்கறி என்று ஒரு தரப்பினர் அடித்து சொல்கின்றனர். இந்த நம்ம ஊரு பஞ்சாயத்தை விடுங்க.
போன வருஷம், ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறியை உலகின் விலையுயர்ந்த காய்கறியாக அறிவித்து இருந்தாங்க. இதன் விலை கொஞ்சம் அல்ல நிறையவே காஸ்ட்லிதான். ஒரு கிலோ ஹாப் ஷூட்ஸ் விலை 1,000 யூரோ அதாவது நம்ம ஊருக்கு மதிப்புக்கு 1 கிலோ சுமார் ரூ.85,614. இந்த காய்கறி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் மாறுபட்ட தரம் ஆகியவை காரணமாக உள்ளூர் சந்தைகளில் அரிதாகத்தான் கிடைக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications