சென்னை: விலைமதிப்பற்ற உலோகம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம் . தங்கத்துக்கு அடுத்த இடத்தில் இருப்பது வெள்ளி . தங்கம் சாதாரண மக்கள் வாங்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது . தற்போது தங்கத்திற்கு போட்டியாக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. வெள்ளி விலை கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது, இதற்கு காரணம் என்ன , எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளி: பல ஆயிரம் ஆண்டுகளாகவே வெள்ளி என்பது முக்கியமான ஒரு உலோகமாக பார்க்கப்படுகிறது. வெள்ளியை நாம் நகைகளாகவும் பாத்திரங்களாகவும் வீடுகளில் பயன்படுத்தி வருகிறோம் . காலம் காலமாக வர்த்தகத்திலும் வெள்ளி முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. பணம் வருவதற்கு முன்பாக வர்த்தகம் செய்வதற்கு வெள்ளியை பயன்படுத்தி இருக்கின்றனர்.

எவ்வளவு வெள்ளி இருக்கிறது: அமெரிக்காவின் USGS அமைப்பு வெளியிடும் தகவலின் படி உலகளவில் 17,40,000 மெட்ரிக் டன்கள் வெள்ளி இருப்பது கண்டறியப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 5,30,000 மெட்ரிக் டன்கள் வெள்ளி பூமியில் இருந்து எடுக்கப்பட வேண்டியுள்ளது என கூறுகிறது. வெள்ளி நாம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களாகவும் நகைகளாகவும் மட்டுமில்லாமல் தொழிற்சாலை அளவில் அதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. நாள்தோறும் அதன் தேவை தொழிற்சாலைகளில் உயர்ந்திருப்பதே அதன் மதிப்பு உயர்வதற்கு மிக முக்கிய காரணம்.

அதிகரிக்கும் தேவை: தற்போது உலகம் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் பயன்படுத்த போகும் பொருட்களில் எல்லாமே வெள்ளி முக்கியமான ஒரு பொருளாக இருக்கிறது. மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள், நாம் பயன்படுத்தும் செல்போன்கள், மருத்துவ உபகரணங்கள் , விண்வெளிக்கு நாம் அனுப்பக்கூடிய பொருட்கள், செமி கண்டக்டர்கள் என சமகாலத்தில் தேவைப்படும் முக்கியமான துறைகள் அனைத்திலுமே வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது. இதுவே கடந்த சில ஆண்டுகளாக வெள்ளியின் மதிப்பு உயர்வதற்கு மிக முக்கிய காரணம் .
முதலீட்டிலும் முக்கியத்துவம்: உலக அளவில் 50 சதவீத வெள்ளிக்கான டிமாண்ட் என்பது தொழில் துறையில் இருந்துதான் வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளும் பசுமை எரி சக்தியை நோக்கி கவனத்தை திருப்புவதால் அது சார்ந்த துறைகள் வளர்கின்றன, எனவே வெள்ளிக்கான தேவையும் அதிகரித்து அதன் விலையும் உயர்வு காண்கிறது. இது தவிர முக்கியமான ஒரு முதலீட்டு கருவியாகவும் வெள்ளி இருக்கிறது. பொருளாதார நிலையற்ற தன்மைக்கு எதிராக எப்படி தங்கத்தில் முதலீடு செய்கிறார்களோ அதே போல அவர்களுக்கான அடுத்த முதலீட்டு வாய்ப்பாக வெள்ளி இருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வெள்ளியை முக்கிய முதலீடாக பார்க்கத் தொடங்கி இருக்கின்றன.

10 ஆண்டுகளில் எவ்வளவு உயர்வு: இந்தியாவில் பார்க்கும் போது 1970களில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2700 ரூபாயாகத்தான் இருந்தது. 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் வெள்ளியின் விலை ஒரு கிலோ 56 ஆயிரம் ரூபாய் வரை உயர்வு கண்டது. பின்னர் வெள்ளியின் விலை சரிந்தது. 2015ஆம் ஆண்டு இந்தியாவில் வெள்ளியின் விலை ஒரு கிலோ 36,000 ரூபாயில் இருந்து 37,000 ரூபாய்க்குள் இருந்தது. அதுவே தற்போது 1,20,000 ரூபாய் என விற்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் வெள்ளியின் விலை 300%க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

உலக அளவில் எவ்வளவு உயர்வு?: சர்வதேச அளவில் பார்க்கும்போது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ட்ராய் அவுன்ஸ் வெள்ளியின் விலை 15.60 டாலர்கள் தற்போது அதன் விலை கிட்டத்தட்ட 36.93 டாலர்களாக உயர்ந்து இருக்கிறது . வெள்ளியின் விலை உயர்வுக்கு நாம் ஏற்கனவே கூறியது போல தொழில்சாலை ரீதியிலான டிமாண்ட் அதிகரித்திருப்பது மிக முக்கிய காரணம். அடுத்ததாக பலரும் முதலீட்டு நோக்கத்தில் இதில் முதலீடு செய்ய முன் வருவது மற்றொரு காரணம்.
இனியும் உயருமா?: எதிர்வரும் ஆண்டுகளிலும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில் மக்களிடையே மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பது ,ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவது செமி கண்டர்களுக்கான காண தேவை அதிகரித்திருப்பது ஆகியவை வெள்ளி விலையை ஏற்றத்தில் தான் வைத்திருக்கும். தற்போது பலரும் வெள்ளியை ஏழைகளுக்கான தங்கம் என அழைக்கின்றனர் . ஏனெனில் பாதுகாப்பான முதலீட்டில் தங்கத்துக்கு அடுத்தபடியாக இருப்பது வெள்ளி.

ஏன் தேவை அதிகரிப்பு?: பெரும்பாலான மக்களால் வாங்கக்கூடிய விலையில் தங்கம் இல்லை எனவே அவர்களால் எளிதாக வெள்ளி வாங்க முடியும் வெள்ளியும் தற்போது பண வீக்கத்துக்கு நிகரான லாபம் தரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது .எனவே தங்கத்திற்கு மாற்றாக பலரும் வெள்ளியில் முதலீடு செய்வதற்கு முன் வருகின்றனர் இதுவும் வெள்ளியின் விலையை உயர்த்துகிறது. ரஷ்யா அரசு கடந்த சில ஆண்டுகளாக வெள்ளியை வாங்கி வைப்பதில் கவனம் செலுத்துகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 535 மில்லியன் டாலர் அளவிலான வெள்ளியை வாங்கி வைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறது.
Rich Dad Poor Dad புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி அடிக்கடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெள்ளியை வாங்குங்கள் என்றே கூறி வருகிறார். எதிர்காலத்தில் வெள்ளி நாம் வாங்க முடியாத விலைக்கு சென்றுவிடும், எனவே வெள்ளியை இப்போதே வாங்கி வையுங்கள் என தெரிவித்து வருகிறார்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications