தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் பொருளாதாரம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் சரிவை காணலாமோ என்ற அச்சமானது எழுந்துள்ளது. இந்த சூழலில் தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் விலைகள் கற்பனை செய்ய முடியாத உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு அதிரடியான எச்சரிக்கையை கொடுத்து, ஒட்டுமொத்த முதலீட்டு உலகையும் அதிர வைத்திருக்கிறார் ரிச் டாட் புவர் டாட் (Rich Dad Poor Dad) புத்தகத்தின் எழுத்தாளரும், நிபுணருமான ராபர்ட் கியோசாகி.

தற்போது 75,000 டாலருக்கு அருகில் வர்த்தகமாகும் பிட்காயின் 7,50,000 டாலர்களை தொடும் என்றும், தங்கம் 35,000 டாலர்கள் வரை உயரும் என்றும் அவர் கணித்துள்ளார். இது நடக்குமா? நடக்காதா? என்பது கேள்வி அல்ல. இது எப்போது நடக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி என சவால் விடும் கியோசாகி, இந்த மாபெரும் ஏற்றம் முன்கூட்டியே தயாராக இருப்பவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் என்கிறார்.

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

உலகளாவிய கடன் சுமை மற்றும் டாலர் மீதான நம்பிக்கையின்மைக்கு மத்தியில், கியோசாகி காட்டும் இந்த மேஜிக் எண்கள் சாத்தியமா? ஒரு வருடத்தில் தங்கம் 7 மடங்கு உயருமா? இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் நிகழும் என கூறும் கியோசாகி, இது நிதிச் சந்தைகளில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளார். அவரின் இந்த எச்சரிக்கையானது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மற்றும் பணவீக்கம், மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் என பல காரணிகள் மத்தியில் வந்துள்ளது.

Also Read

நீண்ட காலமாக தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் குறித்து ஆதரவாக இருந்து வரும் கியோசாகி, கணக்கில் இல்லாத அளவில் பணம் அச்சிடபடுதல் மற்றும் கடன் சார்ந்த வளர்ச்சியை தொடர்ந்து விமர்சனம் செய்தும் வருகிறார். சர்வதேச சந்தைகள் தற்போது கணிக்கவே முடியாத ஒரு குமிழியின் மேல் உள்ளன. பொருளாதாரத்தில் குமிழி என்பது ஒரு பொருளின் விலை அதன் உண்மையான மதிப்பை விட மிக அதிகமாக உயர்ந்து கொண்டே செல்வதை குறிக்கும். இதை தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஒரு சோப்பு குமிழியை உதாரணமாக கொள்ளலாம். அது ஊத ஊத பெரிதாகிக் கொண்டே போகும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் திறனை தாண்டும்போது அதன் மீது லேசான ஒரு பொருள் பட்டால் கூட, அது உடைந்து விடும். அதே நிலைதான் பொருளாதாரத்திலும் நடக்கும்.

இந்த சூழலில் தான் தங்கம் விலையானது ஒரு ஆண்டுக்குள் 35,000 டாலர்களை எட்டலாம் என்றும், வெள்ளி விலையானது ஒரு அவுன்ஸ் 200 டாலர் வரை உயரலாம் என்றும், பிட்காயின் விலை 7,50,000 டாலர்களையும், எத்தேரியம் 95,000 டாலர்களை எட்டும் என்றும் கியோசாகி கணித்துள்ளார்.

Recommended For You

இதனிடையே பிரபல பொருளாதார நிபுணரான பீட்டர் ஷிஃப் வெள்ளி குறித்து பேசுகையில், வெள்ளி விலை ஒரு மிகப்பெரிய பிரேக் அவுட் விலையை எட்டியுள்ளது. எந்த நேரத்திலும் அதன் விலை மீண்டும் எகிறும். சரியான நேரத்திற்காக காத்திருப்பவர்களுக்கான, சந்தை மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்காது. அதே சமயம் தங்கம் மற்றும் வெள்ளி சுரங்க நிறுவனங்களின் பங்குகள் அவற்றின் உச்சத்திலிருந்து 25% சரிந்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், அதை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+