தங்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் மட்டுமே இருக்கும் என்று நம்பியிருந்த முதலீட்டாளர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பிளாக் பிரைடே (Black Friday) எனலாம். கடந்த சில தசாப்தங்களாக கண்டிராத அளவுக்கு, ஒரே நாளில் தங்கம் விலை மளமளவென சரிந்து கீழே விழுந்திருப்பது ஒட்டுமொத்த சந்தையையும் அதிர வைத்துள்ளது.
குறிப்பாக, 1980-களுக்கு பிறகு தங்கம் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திப்பது இதுவே முதல் முறை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தங்கத்தோடு போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் 36% வரை சரிந்துள்ளதால், இது முதலீடு செய்ய கிடைத்த பொற்காலமா? அல்லது சரிவின் ஆரம்பமா? என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் அனல் பறக்கின்றன. நிலைகுலைந்து போயிருக்கும் முதலீட்டாளர்கள் ஒருபுறம் என்றால், நகை வாங்க காத்திருந்தவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

வரலாறு காணாத வீழ்ச்சி ஏன்?
கடந்த வெள்ளிக்கிழமை அன்று தங்கம் விலையானது யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய அளவிலான சரிவை சந்தித்தது. பலருக்கும் தோன்றலாம், அந்த அளவுக்கு ஏறியிருக்கிறதே என்று. ஆனால் இதுவரை தொடர்ந்து தங்கம் விலையானது அதிகரித்து வந்த சூழலில், அதே அளவுக்கு சரிவைக் கண்டு இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை எனலாம். மொத்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சத்தில் இருக்கும் லாபத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்ததால், தங்கம் விலையானது கிடுகிடுவென வரலாறு காணாத அளவில் சரிவை கண்டது. வெள்ளியும் அதேபோன்று பெரும் சரிவை கண்டது. இது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் குறைந்த விலையில் வாங்க கிடைத்த வாய்ப்பா அல்லது இன்னும் குறையுமா என்பது தான் பெரிய கேள்வியே.
பியூச்சர் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸூக்கு 4,700 டாலர்கள் வரையில் சரிவைக் கண்டது. மதிய நேர வர்த்தகத்தில் மீண்டது போல் தெரிந்தாலும், வர்த்தக நேரத்தின் இறுதியில் மீண்டும் விற்பனை அழுத்தமே இருந்தது. குறிப்பாக ஏப்ரல் மாத ஒப்பந்தத்தில் ஒரு அவுன்ஸூக்கு 11.4% அளவுக்கு சரிவைக் கண்டு, வர்த்தக இறுதியில் 4,745 டாலர் என்ற நிலையில் முடிவடைந்தது. 1980-களின் தொடக்கத்திற்கு பிறகு, ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி இதுவாகும்.
மோசமான வெள்ளி வீழ்ச்சி!
வழக்கம்போல தங்கத்தை விட, வெள்ளி விலையானது மிக மோசமான சரிவை கண்டது. மதிய வர்த்தக நேரத்தில் வெள்ளி ஒரு அவுன்ஸூக்கு 35% சரிவைக் கண்டு, 74 டாலர் என்ற நிலைக்கு சென்றது. பின்னர் சற்றே உயர்ந்தாலும், வர்த்தக முடிவில் 78.53 டாலர் என்ற நிலையில் முடிவடைந்தது. இது 35.9% வீழ்ச்சியாகும். இது வெள்ளியின் சரித்திரத்திலேயே கண்ட மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியாகும். இதேபோல் மற்ற உலோகங்களை பொறுத்த வரையில் பல்லேடியம் 15% சரிந்தும், பிளாட்டினம் 17% சரிந்தும் காணப்பட்டது.
நடப்பு வார தொடக்கத்தில் தங்கம் விலையானது 5,600 டாலர்கள் என்ற உச்சத்தையும், வெள்ளி விலையானது 121 டாலர் என்ற உச்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை மணியா?
சந்தையின் போக்கை கணிக்கும் முக்கிய தொழில் நுட்பக் குறியீடுகளில் ஒன்றான ஆர்.எஸ்.ஐ, ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டும் அதிக அளவில் வாங்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டியது. பொதுவாக ஆர்.எஸ்.ஐ 70-ஐ தாண்டினாலே அது அபாயகரமான ஒன்றாக பார்க்கப்படும். ஆனால் தங்கத்தில் ஆர்.எஸ்.ஐ 90-ஐ எட்டியது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத ஒரு உச்சமாகும். இதனால் ஒரு பெரிய விலை சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருந்தது. அப்படி எனில் சரிவு இனி தொடருமா என பலரும் நினைக்கலாம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க விலை ஏற்றம் முடிவுக்கு வந்துவிட்டது என்று இப்போதே கூறிவிட முடியாது. ஆனால் தற்போது சந்தையின் அடிப்படை பொருளாதார காரணிகளை விட, விலையின் அதிரடி மாற்றங்களே சந்தையை வழிநடத்துகின்றன. அதாவது லாபத்தை எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தமே தற்போதைய சரிவுக்கு முக்கிய காரணமாகிறது. ஆக தொடர்ந்து சரிவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications