சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இதன் தாக்கத்தை ஏப்ரல் 22-ஆம் தேதியன்று பார்க்க முடிந்தது. ஏனெனில் அன்றைய தினம் தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.1 லட்ச ரூபாயை எட்டியது. இதனால் பலரும் தங்கம் வாங்குவது கனவுதான் என்று நினைக்கத் தொடங்கினர். ஆனால் மறுநாளில் இருந்து மீண்டும் தங்கம் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் பெரிதாக ஒன்றும் ஏற்றம் இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் 44 ரூபாய் அதிகரித்தது.
மே 2-ஆம் தேதியன்று MCX சந்தையில் 10 கிராம் தங்கம் 93,300 ரூபாயை எட்டியது. ஆனால் 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 22-ஆம் தேதியன்று 10 கிராம் தங்கம் ரூ.1,00,484 ரூபாய்க்கு விற்பனையாகி வரலாற்று உச்சத்தை எட்டியது. அன்றிலிருந்து இன்று வரை பார்க்கும்போது தங்கம் விலை ஏறத்தாழ 7,000 ரூபாய்க்கும் அதிகமாக குறைந்துள்ளது.

தங்கம் குறைந்து வருகிறதே.. தற்போது தங்கம் வாங்கலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். தொடர்ந்து நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏதுவாக ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று தங்கம் விலை உச்சத்தை தொட்டது.
ஆல்மண்ட்ஸ் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மனோஜ் குமார் அரோரா கூறுகையில், "கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது தங்கம் 30 சதவீதம் வரை வருமானத்தை அளித்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டில் தங்கம் நல்ல முதலீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக 2001-ஆம் ஆண்டு முதல் தங்கம் சராசரியாக 15 சதவீதம் வரை வருமானம் வழங்கியுள்ளது. பணவீக்கத்தையும் தாண்டி 1995-ஆம் ஆண்டு முதல் 2 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை முதலீட்டாளர்களுக்கு வருமானம் வழங்கியுள்ளது", என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி முறையால் பதற்றம் நிலவி வருகிறது. இதோடு பணவீக்கம், மத்திய மாநில அரசுகளின் வரி, மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்கி வருவதால் ஏற்படும் டிமாண்ட் போன்ற பல காரணிகள் தங்கத்தின் விலையைத் தொடர்ந்து உயர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா வேகமாக தங்க இருப்பை அதிகரித்து வருகிறது. 2025-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி சீனா 2292 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கிறது. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி கடந்த 3 ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 1,000 டன் வரையில் தங்கத்தை சேமித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பு 879 டன்னை எட்டியுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதார மந்தநிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
எனவே தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் விலை குறைவாக இருக்கும் நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் விலை என்று குறையும் என்பதை கணித்து கூறிவிட முடியாது. இனிவரும் காலங்களில் தங்கம் விலை குறையலாம் அல்லது தொடர்ந்து உயரலாம். ஒருபுறம் தங்கத்தை மக்கள் அதிகமாக வாங்குவதால் தான் விலை உயர்கிறது என்ற கருத்தையும் பொதுமக்கள் முன்வைக்கின்றனர். எது எப்படியோ இனிவரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications