2025 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை தங்கம் . தங்கத்தின் விலை உயர்வு இயற்கையாக நடைபெறவில்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் குறிப்பாக சீனா இஷ்டத்துக்கு தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது . உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு மிக முக்கியமான ஒரு காரணம் இது. இதன் பின்னணியில் சீனா செய்யக்கூடிய மிகப்பெரிய ஒரு தந்திரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
உலக அளவில் தற்போது மதிப்பு மிக்க ஒரு கரன்சியாக டாலர் பார்க்கப்படுகிறது. இந்தியா வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது என்றால் அதற்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்த முடியாது டாலரில் தான் செலுத்த வேண்டும். அதற்கு நாம் ரூபாயை கொடுத்து டாலரை வாங்க வேண்டும். இதே போன்ற நிலைமை தான் மற்ற நாடுகளுக்கும். இப்படி பொது வர்த்தகத்திலும் பொது வணிகத்திலும் டாலரை பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துவதால் தான் அது உலகிலேயே மதிப்பு மிக்க ஒரு கரன்சியாக இருந்து வருகிறது. உலகளவில் அமெரிக்காவின் கை ஓங்கி இருப்பதற்கும் இதுவே காரணம். அதனை உடைக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் திட்டம்.

அதற்காக தான் டாலருக்கு மாற்றான ஒரு சக்தியாக தங்கத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. எனவே டாலர் அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் தான் சீனா அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது .மேக்ரோ பொருளாதார நிபுணரான லூக் குரோமன் டாலரின் பலவீனத்தை சீனா பயன்படுத்தி வருவதாக கூறுகிறார். சீனா தற்போது உலக வர்த்தகத்தில் தங்கம் வாங்கும் போது அதற்கான தொகையை தங்களுடைய கரன்சியான யுவான் மூலம் தான் செட்டில் செய்கிறதாம், டாலரை பயன்படுத்த பயன்படுத்துவது இல்லையாம்.
கச்சா எண்ணேய் மற்றும் பிற பொருட்களின் வர்த்தகத்திலும் டாலரை சார்ந்திருக்காமல் அதிகமான யுவான் மூலம் சீனா வர்த்தகம் செய்கிறது. யுவானை பலப்படுத்த தங்களின் தங்க கையிருப்பை சீனா பயன்படுத்துகிறது. இதன் காரணமாக உலக நிதி சந்தையே பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது என்கிறார் லூக் குரோமன்.
உலக தங்க கவுன்சில் வெளியிடும் தகவலின்படி 2024 ,2025 ஆம் ஆண்டுகளில் மட்டும் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி இருப்பதாக கூறுகிறது. அமெரிக்காவிடம் 8,133 டன்கள் தங்கம் இருக்கிறது இது அமெரிக்காவின் மொத்த கையிருப்பில் 76 சதவீதம் என சொல்லப்படுகிறது. சீனாவை பொருத்தவரை தங்களிடம் 2098 டன்கள் தங்கம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கிறது ஆனால் உண்மையான அளவு 15,000 டன்களுக்கு மேல் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் .

டாலரின் நம்பகத்தன்மை என்பது தங்கத்தை சார்ந்து தான் இருக்கிறது என கூறும் லூக் குரோமென், சீனா யுவானை பயன்படுத்தி தங்கத்தை வாங்குவது வளர வளர உலக அளவில் டாலருக்கான மதிப்பு இன்னும் குறையும் , உலக நிதிச் சூழலை மிகப்பெரிய மாற்றத்திற்கு தள்ளும் என தெரிவிக்கிறார். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் டாலர் தான் தற்போது மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது அதனை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் தங்கத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என கூறுகிறார்.
சீனா தங்கத்தை வாங்குவது என்பது வெறும் பொருளாதாரம் மட்டுமல்ல எதிர்காலத்தில் எந்த நாட்டிடம் அதிக தங்கம் இருக்கிறதோ அந்த நாடு தான் பிக்பாஸாக இருக்கும் என்கிறார். அதாவது உலக பொருளாதாரத்திற்கான விதியை எழுதும் நாடாக இருக்கும் என கூறுகிறார். பொருளாதாரப் போர் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது என கூறும் அவர் இது படைகள் மூலமாக இல்லாமல் கரன்சிகள் மூலமாகவும் கையிருப்புகள் மூலமாகவும் நடைபெறுகின்றன எனக் கூறுகிறார்.
உலக அளவில் யார் செல்வாக்கு மிக்கவர்கள் என்ற போராட்டம் காகித சொத்துகளில் இருந்து தங்கத்திற்கு நகர்ந்து இருக்கிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். இனி யாரிடம் அதிக தங்கம் இருக்கிறதோ அவர்கள் கை தான் உலக அரசியலில் ஓங்கி இருக்கும் எனக் கூறும் அவர் வரும் காலங்களில் உண்மையான போர் என்பது ஆயுத ரீதியாக இருக்காது நிதி ரீதியாக இருக்கும் என்கிறார். அந்த போரின் மைய ஆயுதமாக தங்கமே இருக்கும் என்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications