இன்று இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் உருவாகியுள்ள ஜியோ வேர்ல்ட் பிளாசா என்னும் ஆடம்பர் ரீடைல் சந்தைக்கான மால் இன்று பொது மக்களுக்காக திறக்கப்பட்டு உள்ளது. அம்பானி குடும்பம் மற்றும் பாலிவுட் நட்சத்திர பட்டாளத்துடன் திறக்கப்பட்ட நிலையில் ஜியோ மால் உருவாக யார் காரணம் என்பதை முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்திய ரீடைல் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ரிலையன்ஸ் ரீடைல் மளிகை பொருட்கள், காய்கறிகள், குளிர்பானங்கள் முதல் ஆடை வரையில் சில்லறையாகவும், மொத்த விலை விற்பனையில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்த நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகளான ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் கீழ் நீண்ட காலமாக ஆடம்பர பிராண்டுகளின் இந்திய வர்த்தகத்தை படிப்படியாக ஈர்த்து வந்தனர். இதன் மூலம் சாமானிய நடுத்தர மக்களை வர்த்தக ரீதியில் தொட்டு வரும் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் ஆடம்பர வர்த்தகம் மூலம் இந்திய பணக்காரர்களை தொட முயற்சி செய்ய துவங்கியது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் புதிய தலைவர் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் சேர்மன் ஆக இருக்கும் ஈஷா அம்பானி இந்திய மற்றும் சர்வதேச ஆடம்பர பிராண்டுகளின் அனுபவத்தை ஒரே இடத்தில் இந்தியர்களுக்கு அளிக்கும் வண்ணம் மாபெரும் ரீடைல் விற்பனை தளத்தை உருவாக்க வேண்டும் என ஈஷா அம்பானி தனது கனவு திட்டத்தை முன்வைத்தார்.
இதன் அடிப்படையில் தான் ஜியோ வேர்ல்டு பிளாசா மால்-ஐ அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச கட்டிடகலை மற்றும் டிசைன் நிறுவனமான TVS உடன் ரிலையன்ஸ் குழுமம் இணைந்து பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்டது. ஜியோ வேர்ல்ட் பிளாசா சுமார் 7.5 லட்சம் சதுரடி பரப்பளவில் 66 ஆடம்பர பிராண்டுகளின் கடைகள் உடன் துவங்கப்பட்டு உள்ளது,
மும்பையில் Jio World Plaza திறக்கப்பட்டதை குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், இது ஈஷா அம்பானி-ஐ பாராட்ட வேண்டிய நேரம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் அவரின் தலைமையில் செய்யப்பட்ட பணிகள் மிகவும் பாராடப்படக்கூடியது என செய்தியாளர்களிடம் கூறினார்.
Jio World Plaza திறக்கப்பட்டதை குறித்து ஈஷா அம்பானி கூறுகையில் உலகளாவிய பிராண்டுகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதையும், சிறந்த இந்திய பிராண்டுகளின் திறமை மற்றும் கைவினைத்திறனை முன்னிலைப்படுத்தும் முயற்சிதான் ஜியோ வேர்ல்ட் பிளாசா. இந்திய மக்களுக்க மிகவும் தனித்துவமான ரீடைல் அனுபவத்தையும் உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு துவங்கப்பட்டது என தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications