இந்தியாவின் மிகப்பெரிய ஆடை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே பல தரப்பு வாடிக்கையாளர்களை ஈர்க்க centro, Azorte, yousta எனத் தனித்தனி பிராண்ட் கடைகளைத் துவங்கிய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. ரிலையன்ஸ் ரீடைல் விரிவாக்கத்தின் மூலம் பல முன்னணி பிராண்டுகளில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் தனது ஆடை மற்றும் பேஷன் பொருட்களின் வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல 3ஆம் தரப்புக் கடைகளுக்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதாவது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் பிராண்ட் பொருட்கள் தற்போது B2C பிரிவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ரிலையன்ஸ் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்வது, இதை B2B பிரிவுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் ரீடைல் கடைகள் இனி ரிலையன்ஸ் ரீடைல்-ன் ஆடை மற்றும் பேஷன் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய முடியும். ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 50 சொந்த பிராண்டுகளை ஆடை மற்றும் பேஷன் பிரிவில் துவங்கியுள்ள நிலையில் அடுத்தச் சில வருடத்தில் இதை 2 முதல் 3 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இது கட்டாயம் B2B வர்த்தகத்தில் பெரும் வளர்ச்சியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு கொடுக்கும்.
ரிலையன்ஸ் தனது சொந்த பொருட்களை, தனது சொந்த பிராண்ட் கடைகளில் விற்பனை செய்வதைக் காட்டிலும் இந்தியா முழுவதும் இருக்கும் ரீடைல் விற்பனையாளர்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதன் மூலம் பெரும் வருமானத்தை ஈட்ட முடியும்.
எப்படி ஒரு பிராண்டின் சோப்பு, ஷாம்பு பொருட்களை இந்தியா முழுவதும் விற்கப்படுகிறதோ அதை இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல்-ன் ஆடை மற்றும் பேஷன் பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல ஈஷா அம்பானி முடிவு செய்துள்ளார்.
இதுவரையில் பெரிய ஆடை பிராண்டுகள் தனது வர்த்தகத்தை B2B பிரிவுக்குக் கொண்டு சென்றது இல்லை. பெரிய பிராண்டுகள் B2C அல்லது B2B என ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே இயங்கும். ஆனால் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் 2 பிரிவுகளிலுமே வெற்றிபெறத் திட்டமிட்டு உள்ளது.
இந்த B2B வர்த்தக முறை தற்போது Ajio Business கீழ் சோதனை திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் ரீடைல் காலணிகளுக்கு மட்டுமே Silkfeet, Xlerate, Jivers பிராண்டுகளையும், ஸ்போர்ட்ஸ் ஆடைகளுக்கு athleisure, பெண்கள் காலணிகளுக்கு Feet Up, இந்திய பாரம்பரிய ஆடைகளுக்கு Avaasa, பெண்கள் ஆடைக்கு Riva, குழந்தைகள் ஆடைகளுக்கு Kidlyboo, டி-சர்ட் பிரிவுக்கு Altair என 50க்கும் அதிகமான பிராண்டுகளை வைத்துள்ளது. இதுதவிரப் பல முன்னணி பிராண்ட்கள் உடன் இணைப்பு, வர்த்தகப் பங்கீடு ஆகியவற்றைக் கொண்டு உள்ளது.
இந்தியாவில் ஆடை ரீடைல் மார்கெட்டில் சுமார் 80 சதவீதம் வகைப்படுத்தாத பிரிவாகவே உள்ளது. இதனால் பெரிய பிராண்டுகளுக்கு, இதில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது., ரிலையன்ஸ் ரீடைல்-ன் B2B வர்த்தகம் வெற்றி அடையும் பட்சத்தில் அடுத்த 5 வருடத்தில் அதிக வருமானம் ஈட்டும் பிரிவாக மாறும்.


Click it and Unblock the Notifications