லட்டு மாதிரி வந்த 2000 கோடி முதலீடு.. ஈஷா அம்பானி கையில் ரூ.8.36 லட்சம் கோடி பொக்கிஷம்..!!

உலகளாவிய முன்னணி முதலீட்டு நிறுவனமான கேகேஆர் இந்தியாவில் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாலும், எப்போதும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கொஞ்சம் ஸ்பெஷல் தான். கேகேஆர் நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ரிலையன்ஸ் குழுமத்தில் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தக பிரிவின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் (RRVL) நிறுவனத்தில் சுமார் 2,069.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

லட்டு மாதிரி வந்த 2000 கோடி முதலீடு.. ஈஷா அம்பானி கையில் ரூ.8.36 லட்சம் கோடி பொக்கிஷம்..!!

கேகேஆர் முதலீடு செய்துள்ளது என்பதை தாண்டி, முகேஷ் அம்பானி தனது மாஸ்டர் பிளான்-ஐ செயல்படுத்த பெரும் முதலீட்டை திரட்டியுள்ளார் என்பதே உண்மை. ரிலையனஸ் குழுமத்தில் டெலிகாம் சேவை பிரிவான ஜியோ தனது 5ஜி மற்றும் இதர சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. ஆனால் ஐபிஓ வெளியிடவோ அல்லது டீமெர்ஜ் செய்யவோ வாய்ப்பு இல்லாமல் உள்ளது.

ஆனால் இந்திய ரீடைல் சந்தையை மளிகை பொருட்கள் முதல் ஆடை, பியூட்டி பொருட்கள் வரையில் தனியாகவும், கூட்டணி உடனும் அசத்தி வருகிறது ரிலையன்ஸ் ரீடைல். இது மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் சுமார் 60 சதவீத சந்தை மதிப்பீட்டை ரிலையன்ஸ் ரீடைல் மட்டுமே தற்போது பெற்றுள்ளது. இதை சரியான நேரத்தில் பணமாக்க வேண்டும் என்பது முகேஷ் அம்பானி திட்டம்.

இதற்காக தான் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அடுத்தடுத்து விற்பனை செய்து முதலீட்டை ஈர்த்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டை உறுதி செய்கிறது ரிலையன்ஸ் நிர்வாகம். இதற்கு ஏற்றார் போல் ரிலையன்ஸ் ரீடைல் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்து வரும் காரணத்தால் அதிகப்படியான நிதி தேவையும் உள்ளது.

லட்டு மாதிரி வந்த 2000 கோடி முதலீடு.. ஈஷா அம்பானி கையில் ரூ.8.36 லட்சம் கோடி பொக்கிஷம்..!!

இந்த நிலையில் தான் KKR முதலீடு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது, KKR நிறுவனம் ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் வேளையில் இப்புதிய முதலீடு ஃபாலோ-ஆன் முதலீடாக வந்துள்ளது. RRVL நிறுவனத்தில் தற்போது கேகேஆர் முதலீடு செய்த 2,069.5 கோடி ரூபாய் மூலம் 0.25% கூடுதல் ஈக்விட்டி பங்குகள் கிடைத்துள்ளது.

இதன் மூலம் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கேகேஆர் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தில் பங்கு இருப்பு சுமார் 1.42% ஆக உயர்ந்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு கத்தார் முதலீட்டு ஆணையம் 8,278 கோடி ரூபாய் முதலீடு செய்து கிட்டத்தட்ட 1 சதவீத பங்குகளை பெற்றுள்ளது. இதன் ஈஷா அம்பானி, முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் 8.28 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 8.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் பங்கு மதிப்பின் அடிப்படையில் நாட்டின் டாப் 4 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமீபத்தில் RRVL நிறுவனத்தின் 8-10% பங்குகளை விற்பனை செய்து விரிவாக்க பணிகள், கடனைத் திரும்ப செலுத்துதல் மற்றும் ஐபிஓ வெளியிடுவதற்கான திட்டத்தையும் இதன் மூலம் தீட்ட உள்ளதாக அறிவித்தது.

லட்டு மாதிரி வந்த 2000 கோடி முதலீடு.. ஈஷா அம்பானி கையில் ரூ.8.36 லட்சம் கோடி பொக்கிஷம்..!!

கேகேஆர் நிறுவனம் இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தில் 5550 கோடி ரூபாய் முதலீட்டை தனது Asian Fund IV மூலம் முதலீடு செய்தது. அந்த காலக்கட்டத்தில் தான் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் சுமார் 47,265 கோடி ரூபாய் முதலீட்டை 4.21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திரட்டியது. வெறும் 3 வருடத்தில் 8.36 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+