முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டெலிகாம் துறையை ஜியோ அறிமுகத்தின் மூலம் புரட்டிப்போட்டதை தொடர்ந்து கடந்த 5 வருடமாக ரீடைல் துறையில் அதிகப்படியான கவனத்தை மொத்த நிர்வாகமும் செலுத்தி வருகிறது.
ரீடைல் துறையில் இதுவரையில் பல நிறுவனங்களை கைப்பற்றியிருக்கும் முகேஷ் அம்பானி தற்போது கெல்வினேட்டர் நிறுவனத்தை ஸ்வீடன் நாட்டு நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றியுள்ளார்.

முகேஷ் அம்பானி 80களில் அசத்திய கேம்பா என்னும் குளிர்பான நிறுவனத்தை கைப்பற்றி இன்று பெப்சி, கோகோ கோலா உடன் போட்டிப்போடும் அளவுக்கு உயர்ந்திருக்கும் வேளையில், தற்போது இதை ஃபார்மூலா-வை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கெல்வினேட்டர் பிராண்டும் 80-களில், 90-களில் இந்தியாவில் மிகவும் பிரபலமான பிராண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்த்து வரும் வீட்டு உபயோக பொருட்கள் சந்தையில் தனது தயாரிப்புகளின் எண்ணிகையை அதிகரிக்கும் நோக்குடன் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின்-களை தயாரிக்கும் கெல்வினேட்டரை (Kelvinator) கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல், கெல்வினேட்டரின் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர்களை 2019 முதல் அதன் தாய் நிறுவனமான எலக்ட்ரோலக்ஸ் (Electrolux) உரிமம் பெற்று விற்கப்பட்டு வந்தது. இப்போது இதை முழுமையாக கைப்பற்றி, ரிலையன்ஸ் சொந்தமாக தயாரித்து பொருட்களை நேரடியாக விற்க முடிவு செய்துள்ளது.
கெல்வினேட்டர் பிராண்டை எவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளது என ரிலையன்ஸ் தெரிவிக்கவில்லை என்றாலும், வெள்ளிக்கிழமை Electrolux வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் இந்தியாவில் துணை பிராண்டை விற்பனை செய்தது மூலம் சுமார் 180 பில்லியன் ஸ்வீடன் கிரவுன் அளவிலான தொகையை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 159 கோடி ரூபாயாகும்.
ரிலையன்ஸ் ரீடைல் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு முடிவுகளில் 2025ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த லாரம் 28 சதவீதம் அதிகரித்து 3271 ரூபாயாக உள்ளது. வருவாய் அளவு 11 சதவீதம் அதிகரித்து 73,720 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications