பாலிவுட் டாப் ஹீரோயினாக வலம் வரும் ஆலியா பட் தற்போது ஹாலிவுட்டிலும் கலக்க துவங்கியுள்ளார். முதலில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், இப்போது ஆலியா பட் என அடுத்தடுத்து பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட்-க்கு சென்று வருகிறார்கள்.
இது ஒருபக்கம் ஆலியா பட்-ன் திரைப்பட துறையில் அதிக சம்பளத்தையும், டிமாண்ட்டையும் உருவாக்கி வரும் இதேவேளையில் வர்த்தக துறையிலும் ஆலியா பட் அசத்தி வருகிறார். கோவிட் காலத்தில் திரைப்பட ஷூட்டிங் இல்லாத நிலையில் ஆலியா பட் உருவாக்கிய எட்-ஏ-மம்மா என்ற ஆடைகள் பிராண்ட் தற்போது புதிய உச்சத்தை அடைய உள்ளது.

எட்-ஏ-மம்மா பிராண்ட் கொரோனா காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்டவில்லை என்றாலும், அதன் பின்பு நிலையான வளர்ச்சியில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வருமானத்தையும் ஈட்ட துவங்கியது. இந்த நிலையில் தான் எட்-ஏ-மம்மா பிராண்டின் அடுத்தக்கட்ட முயற்சிகளை எடுக்க ஆலியா பட் திட்டமிட்டார், ஆனால் திரைப்படங்கள், குடும்ப வாழ்க்கை, குழந்தை ஆகியவை முட்டுக்கட்டையாக இருந்தது.
இந்த நிலையில் தான் ஆலியா பட் தனது நெருங்கிய தோழியான ரிலையன்ஸ் ரீடைல் தலைவர் ஈஷா அம்பானி-யிடம் தனது நிறுவனத்தை வாங்கிக்கொள்ளுமாறு பேச்சவார்த்தை நடத்தினார், இதற்கு உடனே ஈஷா அம்பானி ஒப்புதல் அளித்த நிலையில் ஆலியா பட் கொண்டாட்டத்தில் துள்ளி குதித்தார்.

ஆனால் ஈஷா அம்பானி தனது தோழிக்கு கூடுதலான சர்ப்பரைஸ் கொடுக்கும் வகையில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ஆலியா பட்-ன் Ed-a-Mamma பிராண்டும் இணைந்து தனி கட்டணி நிறுவனத்தை அமைக்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது லின்கிடுன் தளத்தில் பதிவிட்டு உள்ளது.
ஆலியா பட் குழந்தைகள் மற்றும் மகப்பேறு உடைகள் ஆகியவற்றை சொந்தமாக டிசைன் செய்து, தயாரித்து, விற்கும் ஆடைகளின் நிறுவனமான , எட்-ஏ-மம்மா (Ed-a-Mamma) நடத்தி வருகிறார். இந்த Ed-a-Mamma பிராண்ட் உடன் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL) இணைந்து கூட்டணி நிறுவனத்தை அமைக்க உள்ளது.

இந்த கூட்டணி நிறுவனத்தில் சுமார் 51% பெரும்பான்மை பங்குகளை ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் கட்டுப்பாட்டில் கொண்டு இக்கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த பிராண்டின் மதிப்பு மற்றும் வர்த்தகத்தை அலியா பட் உடன் இணைந்து ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளது.
மேலும் இக்கூட்டணி மூலம் ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் Ed-a-Mamma பிராண்டின் வர்த்தகத்தை கையில் எடுத்து நிர்வாகம் செய்ய உள்ளது.
2020 இல் ஆலியா பட் நிறுவிய எட்-ஏ-மம்மா 2-12 வயதுடையவர்களுக்கான ஆடை பிராண்டாக உள்ளது. இந்த பிராண்ட் ஆடைகள் அனைத்தும் இயற்கையான துணிகள் மற்றும் இயற்கைக் கருப்பொருள்களுக்கு முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டு இளம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை டார்கெட் ஆக கொண்டு வர்த்தகம் செய்ய உள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக Ed-a-Mamma தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது, மேலும் பிளாஸ்டிக் பட்டன் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்ற கொள்கைகளும், புதுமையான சுற்றுச்சூழல் முன்முயற்சிகளுடன் இந்த பிராண்டின் மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
கூட்டணி நிறுவனம் உருவாக்கப்பட்டது மூலம் ஆலியா பட் தொடர்ந்து எட்-ஏ-மம்மா பிராண்டின் வர்த்தகத்தில் முக்கிய பங்காற்ற முடியும், அதேபோல் பிராண்ட் அம்பாசிடராக இருக்க முடியும். இதேபோல் எட்-ஏ-மம்மா பிராண்டின் தாய் நிறுவனமான Eternalia Creative and Merchandising நிறுவனத்தின் கீழ் பிற வர்த்தகத்தையும் துவங்க முடியும், இதற்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்-க்கும் தொடர்பு இருக்காது. இதோடு ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தக முறைகளையும், கனெக்ஷன்களையும் ஆலியா பட்-ன் Eternalia தெரிந்துக்கொள்ள முடியும் எனவே இது ஆலியா பட்-க்கு ஜாக்பாட் போன்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications