இந்திய நுகர்வோர் சந்தை வர்த்தகம் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது, ஒருபக்கம் விலை போர் கடுமையாக இருக்கும் வேளையில் கடந்த ஆண்டு நுகர்வோர் சந்தையில் இருக்கும் பெரும் நிறுவனங்கள் மத்தியில் டிஸ்ட்ரிபியூஷன் போட்டி துவங்கியது.
இந்த நிலையில் ரீலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் இருக்கும் ஜியோமார்ட் ஹோல்சேல் பிரிவில் ஆப்ரேஷன்களை மேம்படுத்தவும், சீர்படுத்தவும் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் முக்கிய அங்கமாக இருக்கும் ஜியோமார்ட்-ன் பணிநீக்க அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜியோ மார்ட் தனது மொத்த விலை வர்த்தகத்தை கடந்த ஆண்டு கைப்பற்றிய மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகம் மூலம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்த விரிவாக்கத்தில் ஆப்ரேஷன்களை வேகப்படுத்தவும் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் ஜியோ மார்ட் தனது மொத்த விலை விற்பனை பிரிவில் அடுத்த மாதம் முதல் மிகப்பெரிய செலவின குறைப்பு நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இப்பிரிவில் இருக்கும் மொத்த ஊழியர்களில் மூன்றில் 2 பகுதியை பணிநீக்கம் செய்ய ரிலையன்ஸ் திட்டமிட்டு உள்ளது எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டுமே 1000 ஊழியர்கள், 500 உயர் அதிகாரிகளை பணியை ராஜினாமா செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதோடு பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்துடன், பல ஆயிரம் ஊழியர்களை ஏற்கனவே performance improvement plan (PIP) திட்டத்தின் கீழ் சேர்த்துள்ளது எனவும் ஜியோமார்ட் ஹோல்சேல் பிரிவு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் பெரும் பகுதி சேல்ஸ் பிரிவு ஊழியர்களை தற்போது வேரியபிள் பே முறையின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர். இதன் மூலம் இலக்குகளை அடைந்தால் மட்டுமே முழு சம்பளம் கிடைக்கும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு நிர்வாகம் தள்ளியுள்ளது.
ரிலையன்ஸ் ஹோல்சேல் பிரிவுடன் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி இணைக்கப்பட்டதன் மூலம் சுமார் 3500 ஊழியர்கள் ஓரே பதவியில் ஓரே பணியில் உள்ளனர். இதே சரி செய்யவும், ஆப்ரேஷன்கள் அதாவது வர்த்தக முறைகளை சீராக்கவும் இந்த பணிநீக்க முடிவுகள் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்தியாவில் உள்ள மளிகை கடைகளுக்கு பொருட்களை சப்ளை செய்யும் டிர்ஸ்ட்ரிபிஷன் நெட்வொர்க்-ஐ ரிலையன்ஸ் ஹோல்சேல் பிரிவு கைப்பற்றுவது தான் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது முகேஷ் அம்பானி - ஈஷா அம்பானி டீம். இதற்காக ரிலையன்ஸ் கடந்த ஆண்டு முதல் விலை போர்-ஐ துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications