இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் ரீடைல் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் (RRVL) தற்போது முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகளான ஈஷா அம்பானி இணைந்து நிர்வாகம் செய்து வரும் வேளையில் இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் 1.3% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 2,800 கோடி பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ரூ. 2,836 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது.

மேலும் இக்காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் செயல்பாடுகளில் இருந்து வருவாய் 3.5% குறைந்து ரூ. 66,502 கோடியாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பிரிவில் மந்தமான தேவை இருந்ததும், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த அதிகப்படியான முயற்சிகள் மேற்கொள்ளத் தொடர்ந்த முயற்சிகளே ஆகும்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் நிகர வருவாய் குறைந்த போதிலும், மொத்த வருவாய் ரூ. 76,302 கோடியை எட்டியுள்ளது. இதுவும் வருடாந்திர அடிப்படையில் 1.1% குறைந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் தனது B2B வணிகத்தை மறுசீரமைப்பு செய்து, லாபத்தின் மார்ஜின் அளவை மேம்படுத்துவதில் இக்காலாண்டில் கவனம் செலுத்தியதன் எதிரொலி வருவாயில் சிறிய சரிவு.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் EBITDA அளவு 0.3% அதிகரித்து ரூ. 5,850 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகளில் மூலம் கிடைக்கும் EBITDA ரூ. 5,675 கோடியுடன் 1% உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதேபோல் EBITDA மார்ஜின் அளவு 8.8% ஆக 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் அம்பானி, வரும் காலாண்டுகளிலும் ஆண்டுகளிலும் நிறுவனத்தின் ரீடைல் வணிகத்தை விரிவுபடுத்தும் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இக்காலாண்டில் மட்டும் சுமார் 464 புதிய கடைகள் திறக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் மொத்த கடைகள் எண்ணிக்கை 18,946 ஆக உள்ளது.
மேலும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த கடை பரப்பளவு 79.4 மில்லியன் சதுரடியாக உள்ளது, இதேபோல் இக்காலாண்டில் கடைக்கு வந்த மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை வருடாந்திர அடிப்படையில் 14 சதவீதம் அதிகரித்து 297 மில்லியனாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications