ஈஷா அம்பானியின் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனம் பிற முக்கிய போட்டியாளர்களை முந்திக் கொண்டு 112 பில்லியன் டாலர் மதிப்பை பெற்றுள்ளது. ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்தலைவரான அகிலேஷ் பிரசாத் அந்த நிறுவனத்தின் வெற்றியில் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளார்.
ரிலையன்ஸ் டிரெண்ட்ஸின் சமீபத்திய அறிமுகமான அஸோர்ட்டே சந்தையில் பிரபலமாக உள்ள H&M மற்றும் ZARA போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக சவால் விடுத்துள்ளது. 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் சந்தையில் மக்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய விலையில் ஆன்லைனிலும் கடைகளிலும் தயாரிப்புகளை கொட்டி பரப்பியது.

அஸோர்ட்டே (Azorte) கடந்த ஆண்டு ரிலையன்ஸ் ரிடைல் தனது முக்கிய பிராண்ட் கடைகளாக அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் மக்களைச் சென்றடையக் கூடிய தயாரிப்பாக இதை மாற்றும் நோக்கத்தில் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டது.
செல்ப் செக்அவுட் கியாஸ்க் போன்ற டெக்னிக்கல் மாற்றங்களை செய்து புதிய அனுபவத்தை தந்தது ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ். இதற்குக் காரணம் அகிலேஷ் பிரசாத்.
தனது இளங்கலை பட்டப்படிப்பை பொருளாதாரத்தில் முடித்த அகிலேஷ் பிரசாத் டெல்லி ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். கிராமப்புற நிர்வாகத்தில் எம்பிஏ படித்துள்ளார். ரிலையன்ஸில் 2003 ஆம் ஆண்டு பிரசாத் சேர்ந்தார். 2018 ஆம் ஆண்டு செயல் தலைவர் ஆனார். 32 ஆண்டுகால பதவிக்காலத்தில் அவர் இந்திய ரிடைல் சந்தையில் ரிலையன்ஸ் ரிடைல் நிறுவனத்தை முன்னணியில் கொண்டு வந்தார்.
Trends, Ajio, Ajio Business, Project Eve, Trends ஆகிய நிறுவனங்களை பிரசாத் நிர்வாகம் செய்து வந்தார். உலக அளவில் ஒரு இந்திய நிறுவனம் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் துறையில் முன்னுக்கு வரவேண்டும் என்று அவர் உழைத்ததில் ஈஷா அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் முன்னுக்கு வந்தது.
நாட்டில் ஷாப்பிங் அனுபவத்தில் மக்கள் புதிய அனுபவத்தைப் பெற வேண்டும் என்று புரட்சிகர நோக்கில் அஸோர்ட்டே வளையம் வருகிறது.
மொபைல் செக் அவுட், செல்ப் செக்அவுட் கியாஸ்க், பேஷன் டிஸ்கரவரி ஸ்டேஷன் போன்ற ஐடியாக்கள் இதில் அடங்கும்.
மிட் பிரீமியம் பேஷன் செக்மெண்ட் வளர்ந்து வரும் கன்ஸ்யூமர் செக்மென்டில் முக்கியமாக உள்ளது. Gen Z லேட்டஸ்ட் இண்டர்நேஷனல் மற்றும் தற்காலத்து இந்திய பேஷன்களை விரும்புகின்றது.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரிலையன்ஸ் ரீடைல் தலால் ஸ்ட்ரீட் சந்தை வருவாயில் நான்காவது பெரிய நிறுவனமாக உள்ளது.


Click it and Unblock the Notifications