இந்தியாவின் முன்னணி ரீடைல் நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களையும், அனைத்து வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு நாடு முழுவதும் பல்வேறு பிராண்டு கடைகளை திறந்தார்.
இதனால் கடைகள் எண்ணிக்கை மட்டுமே உயர்ந்தது தவிர வாடிக்கையாளர்கள், வருமானம் உயரவில்லை. இந்த சூழ்நிலையில் ஈஷா அம்பானி நாடு முழுவதும் இருக்கும் ரிலையன்ஸ் நெட்வொர்க் கடைகளில் லாபம் ஈட்ட முடியாத கடைகள், பிரேக்ஈவென் எட்டாத கடைகளை மூடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ரீடைல் பிராண்டின் கீழ் திறக்கப்பட்ட புதிய கடைகள் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது ஈஷா அம்பானி தலைமையிலான உயர்மட்ட நிர்வாகம். இல்லையெனில், அந்தக் கடைகள் மூடப்படும் அல்லது வேறு வணிகத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இருந்து தனியாக பிரிந்து பங்குச்சந்தையில் பட்டியலிட தயாராகும் வேளையில், இப்பிரிவின் லாபம் மற்றும் வணிக செயல்திறனை மேம்படுத்துவதற்கு ஈஷா அம்பானி இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளார்.
ரிலையன்ஸ் ரீடைல், இதற்கு முன்பு புதிய கடைகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்கும், லாப அளவுகளை எட்டுவதற்கும் இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் அளித்து வந்தது. ஆனால், இப்போது இக்கால அவகாசத்தை பாதியாக குறைத்துள்ளார்.
இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிர்வாகம், தனது அதிரடியான கடைகள் விரிவாக்கத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளது. முன்பு ஆண்டுக்கு 1,000-க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்த ஈஷா அம்பானி, இனி ஆண்டுக்கு 500 முதல் 550 கடைகள் மட்டுமே திறக்க திட்டமிட்டுள்ளார். 2023-ஆம் நிதியாண்டில், இந்நிறுவனம் 3,300-க்கும் மேற்பட்ட கடைகளைத் திறந்திருந்தது பலரையு ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது.
இதேவேளையில் லாபம் ஈட்ட முடியாத கடைகளை மூடுவதற்கும் இந்நிறுவனம் தயங்கவில்லை. கடந்த மூன்று நிதியாண்டுகளில், 3,650-க்கும் மேற்பட்ட லாபமற்ற கடைகள் மூடியுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஃப்ரெஷ், டிஜிட்டல், ட்ரெண்ட்ஸ், மைஜியோ உள்ளிட்ட பல்வேறு வணிக மாடல்கள் மற்றும் பிராண்டுகள் மூலம் இக்கடைகள் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மின்னணு பொருட்கள், மளிகைப் பொருட்கள், ஆடைகள், காலணிகள், அழகு சாதனங்கள், தங்க நகைகள், கண்ணாடிகள், மருந்துகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications