ஐடி, மீடியா துறையில் வேலை செய்கிறீர்களா..? வெளியானது ஷாக் ரிப்போர்ட்..!!

இந்தியாவில் ஐடி, தொழில்நுட்பம் மற்றும் மீடியாவில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அதிகபட்ச மன அழுத்தத்தை சந்திப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் முக்கிய துறைகளாக கருதப்படக்கூடிய தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் மீடியா ஆகிய துறைகளில் பணிபுரியக்கூடிய ஐந்தில் மூன்று ஊழியர்கள் அதிகபட்ச மன அழுத்தத்தை சந்திக்கிறார்களாம். YourDOST என்ற நிறுவனம் , பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் மன ஆரோக்கியம் குறித்த கணக்கெடுப்பை நடத்தியது.

அதில் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் வெளியாகியிருக்கும் தகவலின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்ட பணியாளர்கள் தான் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 50 வயதுக்குட்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவது சற்றே குறைவாக இருக்கிறது.

ஐடி, மீடியா துறையில் வேலை செய்கிறீர்களா..? வெளியானது ஷாக் ரிப்போர்ட்..!!

தங்களுடைய வேலை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் , வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சமன் செய்ய முடியாதது, வேலைக்கு உரிய அங்கீகாரம் இல்லை ஆகிய மூன்று காரணங்கள் தான் ஊழியர்களின் மன அழுத்தத்திற்கு காரணம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 31% அதிகரித்துள்ளதாம். இதில் அதிக மன அழுத்தம் கொண்டிருப்பவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20% பேர் தங்களால் தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் வேலையையும் சமன் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திற்கும் சென்ற வருவது அதிக சுமை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். மேலும் பெரும்பாலான பெண்கள், ஆண்களுக்கு நிகராக தங்களுடைய வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

கிட்டதட்ட 20% பேர் தங்களால் தங்களுடைய சொந்த வாழ்க்கையையும் வேலையையும் சமன் செய்ய முடியவில்லை எனக் கூறுகின்றனர். பெண்களைப் பொறுத்தவரை வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்திற்கும் சென்ற வருவது அதிக சுமை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். மேலும் பெரும்பாலான பெண்கள், ஆண்களுக்கு நிகராக தங்களுடைய வேலைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் மத்தியில் இது போன்ற மன அழுத்தம் அதிகரித்து வருவது நிறுவனங்களுக்கு பெரிய பிரச்சினையாக முடியும் என கூறும் இவர் YourDOST, நிறுவனத்தின் தலைமை உளவியல் அதிகாரியான ஜெனி கோபிநாத், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு என எம்பிளாயி சப்போர்ட் ப்ரோக்ராம் என்பதை கொண்டு வந்து அவர்களுக்கு மன ஆரோக்கியம் மற்றும் தனிப்பட்ட முறையில் அவர்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தேவையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என கூறுகிறார். ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறியுள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+