ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடைபெறுவது இந்தியாவில் உள்ள பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் மோசடி செய்பவர்களால் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்களுடைய பணத்தை இழந்து உள்ளனர். தாமதமாக மோசடிக்காரர்களை கண்டுபிடித்தல் மற்றும் பிற காரணங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இழந்த தொகை குறித்து புகார் அளிப்பதற்கு தயக்கம் கொள்கின்றனர். ஆனால் விரைவில் செயல்படுவது எவ்வளவு நல்லது ? என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் உங்கள் பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகளை நீங்களே குறைக்கிறீர்கள்.. என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு சான்றாய் சமீபத்தில் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அதன்படி பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர் ஆன்லைன் வர்த்தக மோசடியில் சிக்கி 1.53 கோடியை இழந்து மீண்டும் அதில் 1.4 கோடியை மீட்டுள்ளனர். உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்தால் உங்கள் பணத்தை எளிதில் திரும்பப் பெற முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

பெங்களூர் பானஸ்வாடியில் வசிக்கும் IT தொழில்நுட்ப தம்பதியினர் ஆன்லைன் வர்த்தக முதலீட்டில் அதிக வருமானம் பெற முடியும் என்று வாக்குறுதி அளித்த மோசடிக்காரர்களிடம் சிக்கி உள்ளனர். இந்த மோசடிக்காரர்கள் இங்கிலாந்தில் இருந்து செயல்படக்கூடிய நபர்கள் போல காட்டிக் கொண்டு இந்த ஜோடியை அணுகியுள்ளனர்.
சோசியல் மீடியா மூலம் பேசிய மோசடிக்காரர்கள் தாங்கள் உண்மையாகவே இயங்குவது போல காட்டிக் கொள்ள போலியான ஆன்லைன் வர்த்தக இணையதளத்தையும் உருவாக்கியுள்ளனர். பல மோசடிக்காரர்கள் செய்யும் பொதுவான யுக்தி என்றால் சாமானிய மக்களை குறிவைத்து அவர்களை முதலீடு செய்ய தூண்டி அதிக லாபம் பெற்றது போல காண்பித்துக் கொள்வதுதான். இதே விஷயத்தை தான் இந்த சம்பவத்திலும் செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு உண்மை என்பது போலவே தோன்றியதால் இந்த தம்பதியினர் தொடர்ந்து 1.53 கோடியை மோசடிக்காரரின் அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட தம்பதியினர் தங்களுடைய நிதியில் ஒரு பகுதியை திரும்பப் பெற முயன்ற போது மோசடியின் உண்மை நிலவரம் குறித்து அவர்களுக்கு தெரிய வர தொடங்கியுள்ளது. அவர்களால் திடீரென அந்த இணையதளத்தையும் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் வாடிக்கையாளர் சேவையையும் பயன்படுத்த முடியவில்லை. இதை உணர்ந்த அந்த தம்பதியினர் சட்டென விரைந்து பெங்களூரில் உள்ள கிழக்கு பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த தம்பதியினரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் சுமார் 50-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கினர். மேலும் விரைந்து செயல்பட்டு மோசடியாக பெறப்பட்ட 1.53 கோடியில்.. 1.4 கோடியை மீட்டனர். ஆன்லைன் மோசடிகளில் சிக்கும் நபர்களிடம் போதிய விழிப்புணர்வு இருந்தால் பணத்தை விரைவாக மீட்டெடுத்து விடலாம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications