பொதுவாக மத்திய பட்ஜெட் நெருங்கும்போது, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்வுகள் குறித்த கவலை சிகரெட் மற்றும் பிற புகையிலை உற்பத்தியாளர்களிடம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் உற்பத்தியாளர்கள் சிறிது நிம்மதி அடைந்தனர். ஆனால் அது நீண்ட நாள் நீடிக்கவில்லை.
சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு ஈடுசெய்யும் செஸ் வரியை விதிக்காத அரசாங்கம், இந்த பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அதிகரிப்பது குறித்து மத்திய அரசாங்கம் பரிசீலிக்கலாம் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியின் எதிரொலியாக, இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சிகரெட் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஐடிசி மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் ஆகிய பங்குகளின் விலை சரிவு கண்டது.

குறிப்பாக நாட்டின் முன்னணி புகையிலை உற்பத்தியாளரான காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா பங்கின் விலை கடுமையாக சரிந்தது. இந்தியா இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.21 சதவீதம் சரிந்து ரூ.6,153.45ஆக இருந்தது.. 2024 செப்டம்பர் 16ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கு புதிய 52 வார உச்ச விலையான ரூ.8,480.00ஐ எட்டியது.ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்சவிலையை காட்டிலும் சுார் 27 சதவீதம் குறைவாக உள்ளது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஐடிசி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்து ரூ.401.95ஆக இருந்தது. 2024 செப்டம்பர் 27ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கு புதிய 52 வார உச்ச விலையான ரூ.500.01ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்சவிலையை காட்டிலும் சுார் 20 சதவீதம் குறைவாக உள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications