எஃப்எம்சிஜி துறையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய ஐடிசி 2025ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 19,562 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்தியாவில் எப்எம்சிஜி பிரிவில் முன்னணி நிறுவனமாக ஐடிசி நிறுவனம் இருக்கிறது, இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் உற்பத்தியாளராகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த மார்ச் உடன் முடிந்த 2025 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது 19,562 கோடி ரூபாயாக இருக்கிறது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது தற்போது 0.8 சதவீதம் உயர்ந்துள்ளது அதாவது கடந்த ஆண்டை விட 4,875 கோடி இந்த நிறுவனம் இந்த முறை கூடுதலாக லாபம் பெற்று இருக்கிறது. நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருமானம் என்பது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,900 கோடி ரூபாயாக இருந்தது அது இப்போது 18,494 ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
இதனை அடுத்து ஐடிசி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்கிற்கு ரூ.7.85 டிவிடெண்ட் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக மக்கள் செலவினங்களை குறைத்தது, பெரிய அளவு மக்களுக்கு சம்பள உயர்வு இல்லாதது உள்ளிட்டவை காரணமாக நுகரும் போக்கு குறைந்து காணப்பட்டதாக தெரிவித்திருக்கும் ஐடிசி நிறுவனம் இதுவே எஃப்எம்சிஜி பிரிவு சற்றே மந்தமடைவதற்கு காரணமாக இருந்தது என தெரிவித்திருக்கிறது.
தற்போது பருவமழை காலம் தொடங்கி இருக்கிறது மக்களிடையிலும் செலவு செய்யும் போக்கு அதிகரித்து இருக்கிறது எனவே அடுத்து வரக்கூடிய காலாண்டு முடிவுகள் எல்லாம் தங்கள் நிறுவனத்தின் வருவாயும் லாபமும் அதிகரிக்கும் என நம்புவதாக ஐடிசி தெரிவித்திருக்கிறது. ஐடிசி நிறுவனத்தின் சிகரெட் தொழில் மூலம் அதன் வருமானம் என்பது 6 சதவீதம் உயர்ந்திருக்கிறது அதாவது சிகரெட் விற்பனையின் மூலம் மட்டும் இந்த நிறுவனம் 8,399 கோடி வருமானமாகவும் அதில் 5,017 கோடி லாபமாகவும் ஈட்டி இருக்கிறது.
கடந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த காலாண்டில் சிகரெட் வணிகம் மூலம் இதற்கு கிடைத்த லாபம் 4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. மற்ற எஃப் எம் சி ஜி வணிகத்தை பொறுத்தவரை இந்த நிறுவனத்தின் வருமானம் 5494 கோடி என கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 3.7% அதிகரித்து இருக்கிறதாம். குறிப்பாக ஆட்டா , மசாலா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனை ஆகி இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
தன்னுடைய வேளாண் தொழில் மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது 18 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 7.85 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது . நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த உடன் டிவிடெண்ட் வழங்குவதற்கான தேதி குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications