அதிகரித்து வரும் கடுமையான விதிமுறைகள் மற்றும் சுகாதார அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் புகையிலை நிறுவனங்களின் பாரம்பரிய வர்த்தகம் சமீபகாலமாக அழுத்தத்தை சந்தித்து வருகிறது. சில சந்தைகளில் சிகரெட் விற்பனை அளவு குறைந்து வருகிறது.
இதனால் புகையிலை நிறுவனங்கள் பிற வர்த்தகங்களிலும் கவனம் செலுத்த தொடங்கி விட்டன. நம் நாட்டில் ITC நிறுவனம் சிகரெட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் சமீபகாலமாக இந்நிறுவனம் ஹோட்டல்கள், எஃப்.எம்.சி.ஜி. மற்றும் காகித பொருட்கள் வணிகங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் ITCக்கு பிரதானமாக சிகரெட் வர்த்தகம் உள்ளது.

சர்வதேச அளவில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் அதிக மதிப்பு கொண்ட புகையிலை நிறுவனங்கள் பட்டியலில் பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ITC நிறுவனம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடந்த வாரம் இங்கிலாந்தை சேர்ந்த பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம், பாரம்பரிய சிகரெட் சந்தைக்கு நீண்ட கால எதிர்காலம் இல்லை என்று தெரிவித்தது. இதனையடுத்து லண்டன் பங்குச் சந்தையில் அந்நிறுவன பங்கின் விலை கடுமையாக சரிந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.5.38 லட்சம் கோடியாக குறைந்தது. அதேசமயம் நம்ம ஊரு ITC நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.5.60 லட்சம் கோடியாகும்.
தற்போது ITC நிறுவனத்துக்கு மேல் உலகின் மதிப்புமிக்க புகையிலை நிறுவனங்களாக அமெரிக்காவை சேர்ந்த பிலிப் மோரிஸ் இன்டர்நேஷனல் மற்றும் ஆல்ட்ரியா குழுமம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ITC நிறுவனத்தின் சிகரெட் பிரிவு வர்த்தக வருவாய் 10 சதவீதம் அதிகரித்து ரூ.7,658 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் சிகரெட் வர்த்தகத்தின் பங்களிப்பு 46 சதவீதமாக உள்ளது. லாபத்தில் பார்த்தால் சிகரெட் வர்த்தகம் பெரிய பங்கினை கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் ITCயின் லாபத்தில் சிகரெட் வர்ததகம் 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை ITC நிறுவன பங்கின் விலை 35 சதவீதம் உயர்ந்துள்ளது அதேசமயம் நிப்டி இன்டெக்ஸ் 15 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நீண்ட கால அடிப்படையில் பங்குகள் ஏற்றம் காணும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
ரெலிகேர் புரோக்கிங் நிறுவனம், ITC தனது எஃப்.எம்.சி.ஜி. மற்றும் சிகரெட் வணிகத்தை புதுமை மற்றும் பிரீமியமயமாக்கல் மூலம் தொடர்ந்து உயர்த்தும். தவிர பிரிந்து வரும் ஹோட்டல் வணிகம் திட்டத்தின்படி நகர்கிறது. இது ஒரு நேர்மறையானது. வளர்ச்சி வாய்ப்புகள் உகந்தாக உள்ளது. எனவே பங்கின் இலக்கு விலை ரூ.535 உடன் பங்கை வாங்கலாம் என்ற மதிப்பீட்டை பராமரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications