அவசர பணத் தேவையா? தங்கக் கடனுக்குப் பதில், தங்கத்தை விற்கலாம்.. நகைக் கடையில் விற்பதால் நன்மைகள் பல!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியர்களுக்கு தங்கம் என்பது ஒரு மூலதனத்தை விட முக்கியமானதாகும். தங்கத்துடன் நமக்கென ஒரு இணைப்பு எப்போதும் இருந்து கொண்டேதான் உள்ளது. அதை நாம் எப்படித் தேர்ந்தெடுத்து, கையாளுகிறோம் என்பதிலிருந்தே இது தெளிவாகும்.

 

இருப்பினும், ஒரு பண நெருக்கடி என்று வரும்போது, அதற்கு தங்கம்தான் மிகச் சிறந்த தீர்வாகும். அந்த நெருக்கடியின்போது சென்டிமென்ட்டாக அதை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமாக இருக்காது. ஒரு சராசரி தமிழனுக்கு அவசரப் பணத்தேவை ஏற்படும்போது, அவர் தன்னிடமுள்ள தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறத்தான் நினைப்பார். ஆனால், அதை அடமானம் வைப்பதா அல்லது விற்று விடலாமா என்பதை யோசிக்க வேண்டிய தருணம் இது.

அவசர பணத் தேவையா? தங்கக் கடனுக்குப் பதில், தங்கத்தை விற்கலாம்.. நகைக் கடையில் விற்பதால் நன்மைகள் பல!

தற்போது ஏராளமான நிறுவனங்கள் தங்கத்தைப் பெற்றுக் கடன் தரும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. அதற்கென பலவிதமான சலுகைகளையும் அறிவித்து வருகிறார்கள். அப்படி தங்கத்தை அடமானம் வைக்கும் நிலையில், நீங்கள் ஒரு கடனாளியாகத்தான் ஆவீர்கள். அந்த நிமிடத்திலிருந்தே, எப்படி அதற்கான வட்டியை தவறாமல் கட்டுவது, வைத்த நகையை எப்படி மீட்பது என்ற கவலையே உங்களிடம் மேலோங்கி நிற்கும்.

சில பல ஆண்டுகள் நீடிக்கக்கூடிய இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளை நீங்கள் ஏன் சந்திக்க வேண்டும்? அவசர காலங்களில், உங்கள் அவசரப் பணத் தேவைகளுக்கு உங்கள் தங்கத்தை விற்பதைப் பற்றியே சிந்தியுங்கள். நீங்கள் உங்கள் தங்க நகைகளை யாரிடம் வாங்கியிருந்தாலும் சரி, ஜோயாலுக்காஸ் போன்ற நகைக் கடைகள் அவற்றை தாராளமாக வாங்கிக் கொள்வார்கள்; உங்கள் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாகப் பணத்தையும் கொடுப்பார்கள்.

அவசர பணத் தேவையா? தங்கக் கடனுக்குப் பதில், தங்கத்தை விற்கலாம்.. நகைக் கடையில் விற்பதால் நன்மைகள் பல!

அவ்வாறு உங்கள் நகைக்கான பணத்தை உடனடியாகக் கொடுப்பதுதான் ஒரு அருமையான விஷயம். சில நகைக் கடைகள், அவர்களிடமிருந்து வாங்கிய தங்கத்திற்கு மட்டுமே நியாயமான விலையை நிர்ணயித்து பணம் தருவார்கள் என்பது போன்ற வதந்திகள் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஜோயாலுக்காஸ் போன்ற நகைக் கடைகள், நீங்கள் உங்கள் தங்கத்தை எங்கு வாங்கியிருந்தாலும், அதற்கான சிறந்த விலையை நிர்ணயம் செய்து பணத்தைக் கொடுப்பார்கள். மேலும், அத்தொகையைப் பெற வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகளில் நிற்கத் தேவையில்லை என்பதையும், இந்த முழுமையான நடவடிக்கையும் வெளிப்படையாக நடைபெறுகிறது என்பதையும் ஜோயாலுக்காஸ் உறுதி செய்கிறது

 

பொருளாதார அவசரகால நேரங்களில், குறிப்பாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருக்கும் தற்போதைய சூழலில் உங்கள் தங்கத்தை விற்பதுதான் சிறந்தது என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். சர்வதேசச் சந்தையிலும் தங்கத்தின் விலை எகிறிக் கொண்டுதான் இருக்கிறது. உங்களுக்கு உடனடிப் பணத் தேவைகள் இல்லாவிட்டாலும் கூட, தற்போதைய சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் பழைய நகைகளை அருமையான விலைக்கு விற்று, உங்கள் சேமிப்புகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

அவசர பணத் தேவையா? தங்கக் கடனுக்குப் பதில், தங்கத்தை விற்கலாம்.. நகைக் கடையில் விற்பதால் நன்மைகள் பல!

இத்துறையைச் சேர்ந்த வல்லுனர்களும் பண நெருக்கடி நேரங்களில் உங்கள் தங்க நகைகளை விற்பதுதான் சரி என்பதை வலியுறுத்துகின்றனர். ஒருவழியாக உங்கள் பணத் தேவைகள் முடிவுக்கு வரும்போது நீங்கள் மீண்டும் தங்கம் வாங்க நினைத்தால், அப்போது தாராளமாக வாங்கிக் கொள்ளலாம். நகை அடமானத்திற்காக நீங்கள் கட்டும் வட்டியை விட, புத்தம் புதிய நகைக்கான செய்கூலி ஒன்றும் அந்த அளவுக்கு அதிகமாக இருக்காது.

ஒருவேளை உங்களுக்கு இப்போது பணத் தேவையில்லை, ஆனால் புதிய & சமீபத்திய டிசைன்களுடன் தங்க நகைகளை மாற்றிக்கொள்ள நீங்கள் நினைத்தாலும் சரி, அதற்கும் இதுதான் சரியான தருணம். பல ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வாங்கிய தங்க நகைகளை தற்போது கிட்டத்தட்ட இரு மடங்கு விலைக்கு விற்க முடியும். ஆம், நீங்கள் பழைய நகைகளை புதியவையாக மாற்றிக்கொள்ள இதுதான் சரியான நேரம்.

அவசர பணத் தேவையா? தங்கக் கடனுக்குப் பதில், தங்கத்தை விற்கலாம்.. நகைக் கடையில் விற்பதால் நன்மைகள் பல!

உங்களுக்குப் பிடித்த டிசைன், நகைகளை நகைக் கடைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தவாறே நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். ஜோயாலுக்காஸில் நகை வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால், உடனே www.joyalukkas.com என்ற இணையதளத்திற்குச் சென்று, அங்குள்ள உங்களுக்குப் பிடித்த டிசைன்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். தங்க விலை உயர்விலிருந்து தப்பிக்க உங்களுக்கு பிடித்த நகையின் விலையில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை மட்டும் செலுத்தி முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. நீங்கள் புக் செய்த பின் ஒருவேளை தங்கத்தின் விலை மாறுபட்டாலும், முன்பதிவு செய்த நாளின் விலை அல்லது வாங்கும் நாளின் விலை இரண்டில் எது குறைவோ அந்த விலைக்கே நீங்கள் பர்ச்சேஸ் செய்யலாம்.

உங்கள் பணத்தை தங்கத்தில் மூலதனம் செய்வதற்கான தருணமும் இதுவே. எளிமையான முறையில் தங்கம் வாங்கிட ஜோயலுக்காஸ் ஒரு திட்டத்தை உங்களுக்கு அளிக்கிறது அதுதான் ஜோயாலுக்காஸின் ஈஸி கோல்டு பர்ச்சேஸ் திட்டம். இத்திட்டத்தில் நீங்களும் சேர்ந்து, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வரலாம். இந்த 'எளிய தங்கம் வாங்கும் திட்ட'த்தில் சேர்வதன் மூலம், செய்கூலி உள்ளிட்ட சில கட்டணங்களைச் செலுத்தாமலேயே உங்களுக்குப் பிடித்த நகையை நீங்கள் வாங்க முடியும். ஒருவேளை, கற்கள் வைத்த நகைகளை நீங்கள் வாங்கினால், அவற்றுக்கான விலையையும் அதற்கான வரியையும் நீங்கள் தனியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தத் திட்டத்திலிருந்து இடையிலேயே நீங்கள் வாபஸ் பெற விரும்பினால், அதுவரை எவ்வளவு தொகை செலுத்தி உள்ளீர்களோ அத்தொகைக்கான நகையை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Its is better to sell Gold Ornaments than pledging for emergency money- Why?

Its is better to sell Gold Ornaments than pledging for emergency money- Why? As the markets rates are high for gold now, we can make maximum profit by selling it.
Story first published: Tuesday, July 28, 2020, 9:39 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X