சென்னை: இந்தியாவில் பண்டிகை கால ஷாப்பிங் தொடங்கிவிட்டது . இந்த முறை மக்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது பல்வேறு பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
வாகன விற்பனையில் தொடங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் வரை பல்வேறு பொருட்களின் விற்பனை தீவிரமடைந்திருக்கிறது. இந்த பண்டிகை கால விற்பனையில் அதிக லாபம் பெற்றவையாக இ-காமர்ஸ் நிறுவனங்களே தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றன . பொதுவாகவே இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை செப்டம்பர் மாத இறுதியில் அதாவது தீபாவளி நவராத்திரி பண்டிகைக்கு முன்னதாக பிக் பில்லியன் டேஸ் செயல்படும் மிகப்பெரிய ஒரு பண்டிகை கால தள்ளுபடி உடன் கூடிய விற்பனை அறிவிப்பை வெளியிடும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் பண்டிகை கால விற்பனை தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டு விற்பனை என்பது தொடங்கிவிட்டது .இந்த முறை ஜிஎஸ்டி வரி குறைப்புடன் தள்ளுபடி சேர்த்து பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்து இருக்கிறது . இது அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் லாபம் ஈட்டி தந்து இருக்கின்றன.
பண்டிகை கால ஷாப்பிங் சீசன் தொடங்கிய முதல் ஒரு வாரத்திலேயே இந்த நிறுவனங்கள் 60,700 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது இது 29 சதவீதம் அதிகம் என டாட்டம் இன்டெலிஜென்ஸ் என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது . பிக் பில்லியன் டேஸ் மற்றும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகிய இரண்டு சேல்களும் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கும் பெரிய லாபத்தையும் பெரிய அளவில் விற்பனையும் ஈட்டி தந்திருக்கின்றன .
ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் ஜென் ஸீ ஷாப்பர்கள் அதிக அளவில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போக்கு ஆகிய இரண்டும் தான் இந்த விற்பனை இவ்வளவு உயர காரணம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விற்பனை சீசனில் 1.2 லட்சம் கோடி ரூபாய் வரை விற்பனை இருக்கும் என அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயம் செய்திருக்கின்றன.

கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சம் கோடி வரை இந்த பண்டிகை கால விற்பனையில் இரண்டு நிறுவனங்களும் கல்லா கட்டின . 2023 ஆம் ஆண்டில் இது 81 ஆயிரம் கோடியாக இருந்தது. அதாவது ஆண்டுதோறும் இந்த விற்பனை என்பது அதிகரித்து தான் வருகிறது .இந்த முறை அது ஜிஎஸ்டி வரி குறைப்பால் மேலும் அதிகரித்து இருக்கிறது . செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் மட்டும் இந்த ஆன்லைன் தள்ளுபடி விற்பனையில் 60 ,700 கோடி ரூபாய்க்கு விற்பனை நிகழ்ந்திருக்கிறது.
அதிகபட்சமாக இ காமர்ஸ் தளங்களில் மக்கள் மொபைல் ஃபோன்களை தான் வாங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 42 சதவீதம் மொபைல் போன்கள் விற்பனையில் இருந்து தான் இந்நிறுவனங்களுக்கு லாபம் வந்திருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த முறை வீட்டு உபயோகப் பொருட்கள் 41% விற்பனையை பதிவு செய்திருக்கின்றன . வழக்கத்தை விட இந்த ஆண்டு உபயோக பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதற்கு ஜிஎஸ்டி வரிக்குறிப்பு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது .
அதே போல கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையும் இரண்டு இலக்க வளர்ச்சி அடைந்திருக்கிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தை பொறுத்தவரை தங்களுடைய தள்ளுபடி விற்பனை தொடங்கி முதல் 48 மணி நேரத்தில் 606 மில்லியன் விசிட்களை பெற்றதாக தெரிவித்திருக்கிறது . இப்படி பிளிப்கார்ட் வந்தவர்களில் மூன்றில் ஒருவர் ஜென் ஸீ தலைமுறை சேர்ந்தவர்கள்.
அமேசான் முதல் 48 மணி நேரத்தில் 38 கோடி விசிட்களை பெற்றதாகவும் இதில் பெரும்பாலும் இந்தியாவின் 9 மெட்ரோ நகரங்களில் இருந்து வந்தது என தெரிவித்திருக்கிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 50% உயர்ந்திருக்கிறதாம். எல்இடி டிவி விற்பனை 23 சதவீதம் அதிகரித்து இருக்கிறதாம்.
அதேபோல ப்ரீமியம் கைகடிகாரங்கள், நகைகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் கடந்தாண்டை விட இந்த ஆண்டு அதிகம் விற்பனை செய்திருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவிக்கிறது, கிட்டத்தட்ட 80 லட்சம் பொருட்கள் ப்ரைம் உறுப்பினர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த இரண்டு நாட்களிலேயே டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் சௌரத் ஸ்ரீனிவாஸ்தவா தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications