உலக அளவில் அதிகமாக தங்கத்தை இறக்குமதி செய்யக்கூடிய ஒரு நாடாக இந்தியா தொடர்ந்து நீடித்து வருகிறது. நகைகளாகவும் கட்டிகளாகவும் பல நூறு டன்கள் தங்கத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். ஆனால் இனி அந்த நிலை மாறப் போகிறது.
தங்கம் இருப்பு குறித்து ஆய்வு: இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பு குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வட மாநிலம் ஒன்றில் 20 மெட்ரிக் டன்கள் அளவிலான தங்கம் இருப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பூமிக்கடியில் பெரிய அளவுக்கு தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது.

ஒடிசாவில் தங்கப்புதையல்: தியோகார்க், சுந்தர்கார்க், அங்குல், கொராபட் உள்ளிட்ட ஒடிசா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மண் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை ரசாயன ரீதியான சோதனைக்கு உட்படுத்திய போது தங்கம், இருப்பு இருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மல்காங்கிரி ,சாம்பல்பூர் உள்ளிட்ட இடங்களில் தங்கம் இருக்கிறதா என்ற ஆய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
20 மெட்ரிக் டன்கள் தங்கம்: தற்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி பார்த்தால் ஒடிசா மாநிலத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் வரை தங்கம் இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. இந்த பகுதியில் தங்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக அரசு இந்த பகுதியில் தங்கத்தை தோண்டி எடுப்பதற்கான விரிவான ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.
இந்தியாவில் உற்பத்தி: இந்த ஆய்வு பணியை தொடர்ந்து சுரங்கம் அமைத்து தங்கத்தை தோண்டி எடுப்பதற்கான ஒப்பந்த பணிகளை அரசு வழங்கும். இதற்கான ஒப்பந்தத்தை பெறக்கூடிய நிறுவனம் பூமிக்கு அடியிலிருந்து தங்கத்தை தூங்கி தோண்டி எடுத்து அதனை நாம் பயன்படுத்தக்கூடிய உலோகங்களாக மாற்றி வழங்கும். இந்தியாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 800 டன்கள் தங்கத்தை இறக்குமதி செய்து இருக்கிறது. இந்தியாவுக்குள்ளேயே தங்கம் உற்பத்தி என்பது 1.6 டன்கள் தான்.
தங்கம் விலை குறையுமா: தற்போது ஒடிசா மாநிலத்தில் தங்கம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே தங்கம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது. உள்நாட்டிலேயே தங்கம் உற்பத்தி செய்யப்படும்போது அதன் விலை குறைவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் தங்கம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகள் எல்லாம் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.
மத்திய பிரதேசத்தில் தங்கப்புதையல்: முன்னதாக மத்திய பிரதேச மாநிலத்திலும் இதே போல தங்கம் இருப்பு இருப்பது இந்திய புவியியல் ஆய்வு அமைப்பால் உறுதி செய்யப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு அருகே இருக்கக்கூடிய பகவான் குலேரி என்ற பகுதியில் பூமிக்கடியில் கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவுக்கு தங்கம் புதைந்து கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications