TCS, Infosys-க்கு ஜாக்பாட்.. அமெரிக்காவின் வீழ்ச்சியில் இந்தியாவுக்கு லாபமா..?

அமெரிக்க டெக் பங்குகளின் தடுமாற்றம், டிரம்ப்-ன் புதிய வரி, வட்டி விகித உயர்வு என அனைத்து பிரச்சனைகளையும் கடந்து ஐடி பங்குகள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது. என்ன காரணம்..?

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 2,523.60 ரூபாயில் துவங்கி துவங்கி 2,640 வரையில் உயர்ந்துள்ளது இதன் மூலம் சுமார் 5% ஏற்றம் கண்டுள்ளது, இதேபோல் இன்போசிஸ் 1,151 ரூபாயில் தொடங்கி 1,185 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 4.69% மேல் உயர்ந்துள்ளது. ஹெச்சிஎல் 6.28 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.33 சதவீதமும், விப்ரோ சுமார் 4% உயர்வையும் பதிவு செய்துள்ளது.

TCS, Infosys-க்கு ஜாக்பாட்.. அமெரிக்காவின் வீழ்ச்சியில் இந்தியாவுக்கு லாபமா..?

அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக இருக்கும் நிலையிலும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் பெரும் கடனில் இயங்கும் ஏஐ நிறுவனங்கள் வட்டி விகித உயர்வு மூலம் அதிக வட்டியை செலுத்த வேண்டிய காரணத்தால் நிதி ரீதியாக பெரியளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Also Read

இதன் எதிரொலியாக அதிக மதிப்பில் வர்த்தகமாகும் உலகளாவிய AI பங்குகளை கிடைத்த லாபம் போதும் என மனநிலையில் தொடர்ந்து விற்பனை செய்து வரும் முதலீட்டாளர்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிப்பு இல்லாத இந்திய IT சேவை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். மேலும் இந்திய ஐடி நிறுவனங்கள் குறைந்த கடன் அதிகப்படியான பண இருப்புடன் உள்ளது.

ஏஐ துறையில் உருவாகியுள்ள நிலையற்ற தன்மை மூலம் நவம்பர் மாதத்தில் மட்டும் இந்தியப் பங்குகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர்.

இதற்கிடையில் தான் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரை வரி விதிக்கும் பரிந்துரை அந்நாட்டின் அரசிடம் வைத்துள்ளது அமெரிக்க வர்த்தக துறை. ஆனால், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் இந்தியப் பொருட்களுக்கான வரி 17% ஆகக் குறைக்கப்படலாம்.

இதேவேளையில் ஏஐ தொழில்நுட்ப சேவைக்காக அடுத்தடுத்து உலகளாவிய நிறுவனங்கள் இந்திய ஐடி சேவை துறையை அணுக துவங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல நிறுவனங்கள் தங்களுடைய டெக் அணியை மொத்தமாக இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கொடுத்து அதன் டெக் கட்டமைப்பின் முழு அதிகாரத்தையும் கொடுக்க தயாராகியுள்ளது.

இதனால் இந்திய ஐடி சேவை துறைக்கான புதிய வர்த்தக வாய்ப்புகள் மெல்ல மெல்ல அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஏஐ துறைக்கு இணையான வளர்ச்சி இல்லையென்றாலும் புதிய தொழில்நுட்பத்தில் வர்த்தகம் பெற துவங்கியுள்ளது ஐடித் துறைக்கான பலமாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+