உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா துறை திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பல முக்கியமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் வாயிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மட்டும் அல்லாமல், சுற்றுலாத் தலங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2022 ஆம் ஆண்டில் மட்டும் உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு சுமார் 24.87 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இதில் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மட்டும் 4.10 லட்சம்.
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேச மாநிலத்தின் சுற்றுலா துறை மிகப்பெரியதாக இருப்பது மட்டும் அல்லாமல் விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட உள்ள நிலையில் இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் அயோத்திக்கு படையெடுக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ள காரணத்தால் இம்மாநிலத்திற்கு அடுத்த 10 வருடத்திற்கு சுற்றுலா துறை முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக விளங்கும்.
ஜப்பான்
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் 30 நகரங்களில் ஹோட்டல்களை கட்டுவதில் ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருவது மட்டும் அல்லாமல் அதிகப்படியான முதலீட்டை செய்ய உள்ளதாக இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
7, 200 கோடி ரூபாய் முதலீடு
ஜப்பானின் பிரதிநிதிகள் உத்தரபிரதேச மாநில அரசுடன் செய்த ஒப்பந்தம் படி இம்மாநிலத்தில் சுமார் 7,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளனர். முதலீட்டாளர் உச்சிமாநாட்டில், ஜப்பானிய நிறுவனமான ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்டர்நேஷனல் கம்பெனி லிமிடெட் (எச்எம்ஐ குரூப்) ஆக்ரா, அயோத்தி மற்றும் வாரணாசி உட்பட 30 நகரங்களில் ஹோட்டல்களைத் திறக்க முடிவு செய்தது.
சுற்றுலா துறை
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்த அம்மாநில அரசு எடுத்து வந்த தொடர்ச்சியான முயற்சியால் சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிட்டி துறை வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் மாநில தலைநகரில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் சுற்றுலா துறையும் முதலீட்டாளர்களின் கவனத்தைப் பெற்றன.
ராமர் கோயில்
அயோத்தியில் ஜனவரி 2024க்குள் பிரமாண்டமான ராமர் கோயிலும் கட்டப்படும், இதன் மூலம் இம்மாநிலத்தில் சுற்றுலா துறையும் பணிகள் எண்ணிக்கையும் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் அயோத்திக்கு வந்துள்ளனர்.
1.45 லட்சம் வேலைவாய்ப்புகள்
உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு வாயிலாக உத்தரபிரதேசத்தின் சுற்றுலா துறை 98193 கோடி ரூபாயும், விருந்தோம்பல் துறையும் 20722 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளன. இதன் மூலம் இனி ஆண்டுகளில் இரு துறைகளிலும் சுமார் 1.45 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications