2025 ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான பேர் தினமும் டிவியிலும், மொபைலிலும் கிரிக்கெட் போட்டிகளை பார்த்து ரசித்து வருகின்றனர். ஜியோஹாட்ஸ்டார் ஐபில் போட்டிகளின் போது ஒவ்வொரு ஒவருக்கும் இடையே விளம்பரங்களை ஒளிப்பரப்பி ஆயிரக்கணக்கான கோடியை சம்பாதிக்கிறது. ஐபிஎல் போட்டிகளின் போது காட்டப்படும் விளம்பரங்களை நாம் சாதரணமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அதில் அடுத்த தலைமுறையை பாதிக்கும் ஆபத்து இருப்பதை பிரபல நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டெக்ஸ்டர் கேபிட்டல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் ஜெயந்த் முந்த்ரா கூறுகையில், இந்த வருட ஐபிஎல் ஒரு அவமதிப்பாக மாறிவிட்டது.
உங்கள் திரையில் ஐபிஎல் போட்டிகளின் போது இடை இடையே காட்டப்படும் ஒவ்வொரு இரண்டாவது விளம்பரமும் ராஜ்ஸ்ரீ, விமல் அல்லது கமலா பசந்த் போன்ற புற்றுநோயை உண்டாக்கும் குப்பைகளால் நிரம்பியது. மேலும் ஒவ்வொரு மூன்றாவது விளம்பரமும் ட்ரீம்11, பொக்கர்பாசி,மை11சர்க்கிள் போன்ற சூதாட்ட விளம்பரங்களாக உள்ளன. இவை சிறியவர்கள் மற்றும் பெரியவர்களை பந்தய கற்பனைகளில் கவர்ந்திழுக்கின்றன. இது பொழுதுபோக்கு அல்ல ஆனால் பொதுசுகாதாரம் மற்றும் ஓழுக்க நெருக்கடியாகும் ஆனால் அரசாங்கம் அசால்டாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, புகையிலை மற்றும் அதுசார்ந்த பொருட்களால் ஆண்டுதோறும் 13 லட்சம் இந்தியர்கள் பலியாகின்றனர். டாடா மெமோரியலின் தகவல்களின்படி, இந்தியாவில் 80 சதவீத வாழ் புற்றுநோய்களுக்கு குட்கா மட்டுமே காரணம். ஆனால் இந்த பிராண்டுகள் ஜியோஹாட்ஸ்டாரில் தாங்கள் மிட்டாய் விற்பனை செய்வது போல் பெருமையுடன் விளம்பரங்கள் செய்கின்றன. 2003 புகையில்லை சட்டத்தில் உள்ள ஓட்டைகளை மாற்று விளம்பரங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்கின்றன.
கேபிஎம்ஜி அண்மையில் இந்திய கேமிங் துறை குறித்து சில திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தியது. உண்மையான பண விளையாட்டுகளில் (ஆர்எம்ஜி) ஈடுபடுபவர்களில் 60 சதவீதம் பேர் பணத்தை இழக்கிறார்கள். ட்ரீம்11இன் கோடீஸ்வரர்களா? இதில் பங்கேற்பவர்களில் 0.01 சதவீதம் பேர் மட்டுமே பெரிய வெற்றியை பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் ஜாக்பாட்டிற்கு நிதியளிக்கும் ஏமாளிகள். இது போன்றவற்றை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்க வேண்டுமா?. ஏனெனில் பிடிக்கிறதோ இல்லையோ- இதுவும் மது அல்லது புகையிலை போலவே பல குடும்பங்களின் செல்வத்தை அழித்து வருகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் தாங்கள் விரும்பும் விஷயங்களை செய்வதை உங்களால் தடுக்க முடியாது என்பது எனக்கு புரிகிறது. இந்த பாவத் தொழில்களும் பல குடும்பங்களின் வாழ்வாதாரங்களாக உள்ளன என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். உண்மையில் புகையிலையை பொறுத்தவரை, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு வாழ்வாதாரங்கள் அளிக்கின்றன. அது மிகவும் மோசமாக இருந்தால் அரசாங்கம் ஏன் இவற்றை தடை செய்யவில்லை என்ற கேள்விக்கு எளிதான பதில்கள் இல்லை. அரசாங்கத்தால் எதையாவது தடை செய்ய முடியாது என்பதால், அது அதை விளம்பரப்படுத்துவற்கான ஒரு பகுத்தறிவாகவும் மாறுமா? என்ற கேள்விக்கு எளிதான பதில் உள்ளது. விளம்பரங்கள் ஒவ்வொரு ஓவரிலும் வந்து, தீய சக்தியில் மூழ்கடிக்கின்றன. இன்னும் மோசமாக, டிவியின் மணிக்கு 12 நிமிட கால விளம்பர வரம்பு ஓடிடி தளங்களை கட்டுப்படுத்தாது. எனவே ஜியோஹாட் காட்டுத்தனமாக இயங்குகிறது. குட்கா (பான் மாசாலா விளம்பரங்கள்) மற்றும் பெட்டிங் ஆப்ஸைகளை (கற்பனை விளையாட்டு) விளம்பரப்படுத்தி பெரிய அளவில் பணம் சம்பாதிக்கிறது.
கேடு விளைவிக்கும் குட்கா, பெட்டிங் விளையாட்டுகள் போன்றவை தடை செய்வது சாத்தியம் என்பதை பிற நாடுகள் நமக்கு காட்டுகின்றன. உதாரணமாக தென்னாப்பிரிக்காவில் பந்தயம், உண்மையான பண விளையாட்டு அல்லது சூதாட்ட தளங்களுக்கான விளம்பரங்களை தடை செய்துள்ளது. ஆஸ்திரேலியா மாற்ற விளம்பரங்கள் உள்பட புகையில்லை விளம்பரங்களை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக குறைத்துள்ளது. குழந்தைகள் ஷாரூக்கான் மற்றும் அஜய் தேவகன் போல் விமலை மெல்லுவதை போல நடிக்கும்போது நாம் இன்னும் இரண்டு முறை யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஒழுங்குமுறை அமைப்புகளே விழியுங்கள், நீங்கள் கிரிக்கெட்டை மட்டுமே பார்க்கவில்லை, நீங்கள் போதை மற்றும் நோயை பச்சையாக காட்டுகிறீர்கள். இப்போதே இந்த முட்டாள்தனத்தை நிறுத்துங்கள் அல்லது அடுத்த தலைமுறை அவர்களின் நுரையில் மற்றும் பணப்பையுடன் பணத்தை செலுத்துவார்கள் என்று எச்சரி்க்கை செய்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications