சென்னை: பிரபலமான கோடீஸ்வர தொழிலதிபர்களிடம் உங்கள் வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டால், உழைப்பு தான் என்று கூறுவார்கள். ஆனால் எனது வெற்றிக்கு காரணம் நியூமராலஜி தான் என்று அதிக நம்பிக்கையுடன் சொல்கிறார் ஒரு தொழிலதிபர்.
அவர் யாருமல்ல ரூ.7,300 கோடி மதிப்பிலான கல்வி நிறுவனத்தை உருவாக்கியவரும், ரியல் எஸ்டேட் முதலீட்டாளருமான கோடீஸ்வரர் ஜே.சி. சவுத்ரி.

இவர் தனது வாழ்க்கையில் படிபடியாகத் தான் முன்னேறி வந்துள்ளார். அரியானா மாநிலத்தில் அதிகம் தெரியாத செவ்லி கிராமத்தில் 1949ல் ஒரு சிறிய கடை நடத்தி வந்த ஒரு தந்தைக்கு மகனாக பிறந்தார். சவுத்ரி தனது 12 வயது வரை காலில் செருப்பு அணிந்ததில்லை. கல்லூரிக்கு செல்லும் வரை பேண்ட் அணிந்ததில்லை. இருப்பினும் சவுத்திரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார்.
படிப்பில் படு கெட்டியான தாவரவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1972ல் பிலானியில் உள்ள புகழ்பெற்ற பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியில் இன்ஸ்டிடியுட்டில் எம்.எஸ்.சி. முடித்தார். பல பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்றினார். இறுதியில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று, டெல்லி பள்ளியின் முதல்வராக ஆனார். 1984ல், தனது வெற்றியின் ரகசியம் தனது பிறந்த தேதியில் மறைந்திருப்பதாக உணர்ந்தார்.
சவுத்ரியின் மனைவியின் சகோதரர், நியூமராலஜியை அவருக்கு அறிமுகம் செய்தார். இதனையடுத்து தனது பிறந்த தேதிக்கும் அவரது வாழ்க்கையில் நடந்த எந்தவொரு நிகழ்வுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். இதனையடுத்து தனது சொந்த கிராமத்துக்கு சென்று பிறந்த தேதியை சரி செய்தார். ஆவணங்களில் உண்மையாக மாறாகதான் இருந்தது.
1988ல் வசதியான அரசு வேலையை விட்டு விட்டு ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் என்ற ஆகாஷ் இன்ஸ்டிடியுட்டை நிறுவினார். வெறும் 12 மாணவர்களுடன் மட்டுமே தொடங்கிய இன்ஸ்டிடியுட்டில் இப்போது மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆகாஷில் இணைந்துள்ளனர்.
சவுத்ரி தனது வெற்றியின் பெரும் பகுதிக்கு நியூமராலஜி தான் காரணம் என நம்பிக்கையாக கூறுகிறார். கல்வி நிறுவனத்துக்கு திறமையானவர்களை பணியமர்த்தல், நிலம் வாங்குதல் மற்றும் பிற வணிக முடிவுகள் போன்றவற்றில் நியூமராலஜியை சார்ந்தே சவுத்ரியின் செயல்பாடுகள் இருந்தன.
2019ல் அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு தளமான ப்ளாக்ஸ்டோன், ஆகாஷ் நிறுவனத்தில் 37.5 சதவீத பங்குகளை ரூ.1,350 கோடிக்கு வாங்கியது. அதன் பிறகு சவுத்ரி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 2021ல் ஆகாஷ் நிறுவனத்தை கல்விதொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.7,300 கோடிக்கு விற்று விட்டார். அது முதல் சவுத்ரியும் அவரது குடும்பமும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர்.
சவுத்ரி Nummero என்ற நியூமராலஜி தளத்தையும் உருவாக்கியுள்ளார். சவுத்ரி குடும்பம் ரூ.300 கோடிக்கு இரண்டு பங்களாக்கள், மூன்று சொகுசு குடியிருப்புகள், பண்ணை வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியுள்ளனர். டெல்லியில் ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையும் சவுத்ரி குடும்பம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications