ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான அவர் தனது தனித்துவமான தலைமை உத்திகளுக்காக பெயர் பெற்றவர். இவர் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திப்பவர்.
இதற்கு நல்ல உதாரணமாக, 2014ல் ஜெப் பெசோஸ் தனது நிறுவனத்தில் பணியாற்றும் விசுவாசமான ஊழியர்களை தக்கவைத்து கொள்வதற்காக அறிமுகம் செய்தது தான், வேலை விட்டு வெளியேறுவதற்கு பணம் (Pay to Quit) திட்டத்தை சொல்லலாம். இதன்படி, தனது நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு 5,000 டாலர் (சுமார் ரூ.4 லட்சம்) வரை வழங்குகிறார்.

வேலை விட்டு போனால் ரூ.4 லட்சம் கொடுக்கிறேன் என்றால் வேலை பார்க்கிறவங்க பணத்தை வாங்கிட்டு போவாங்க என்று தான் நாம பொதுவா நினைப்போம். ஆனால் ஜெப் பெசோஸ் என்ன சொல்றான்னு பாருங்க, எல்லோரும் சிறிது நேரம் ஒதுக்கி, அவர்கள் உண்மையில் என்ன விரும்புகிறார்கள் என்பதை பற்றி சிந்திக்க ஊக்குவிப்பதே இதன் குறிக்கோள். ஒரு ஊழியர் நீண்ட காலத்துக்கு விரும்பாத இடத்தில் வேலை பார்ப்பது அவருக்கோ மற்றும் நிறுவனத்துக்கோ ஆரோக்கியமாக இருக்காது என்று கூறுகிறார்.
ஜெப் பெசோஸ் பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஆண்டுக்கு ஒரு முறை, நம் பணியாளர்கள் வெளியேறுவதற்கு நாம் பணம் கொடுக்க வேண்டும். இதன்படி, முதல் ஆண்டில் 2,000 டாலர் வழங்கப்படும். பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு 1,000 டாலர் அதிகரித்து 5,000 டாலர் அடையும் வரை கொடுக்கப்படும்.
தயவுசெய்து இந்த ஆஃபரை எடுக்க வேண்டாம் என்ற தலைப்பில் பணியாளர்களுக்கு மெயில் அனுப்பப்பட்டுள்ளது. பணியாளர்கள் இந்த ஆஃபரை எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம், அவர்கள் நிறுவனத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
வேலையை விட்டு போனா பணம் கொடுக்கிறேன் திட்டத்தை ஜெப் பெசோஸூக்கு முன்பே ஒரு நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான ஜெப்போஸ் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. அதனை பார்த்து ஜெப் பெசோஸ் தனது நிறுவனத்தில் செயல்படுத்தி வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2022ல் அமேசான் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. பொதுவாக கிறிஸ்துமஸ் விடுமுறைகள் போன்ற உச்ச சீசனுக்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஆஃபரை அமேசான் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications