சென்னை: தங்கம் வாங்குவது பல இந்தியர்களுக்கு விருப்பமான முதலீட்டுத் தேர்வாக இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பல நகைக்கடைகள் தங்கம் வாங்கும் சேமிப்பு திட்டங்களை வழங்குகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, முடிவில் நகையாகப் பெறும் இந்தத் திட்டங்கள் லாபகரமானதாகத் தோன்றலாம். ஆனால், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு சில விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.
பண்டிகை காலம் நெருங்கி வந்து விட்டால் போதும், அனைத்து நகை கடைகளும் சேர்ந்து உங்களிடம் தங்க நகை சேமிப்பு திட்டம் பற்றி விளக்கத் தொடங்கி விடுவார்கள். இது போன்ற திட்டங்களைப் பயன்படுத்துவது நல்லதா.. அப்படி நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால் எந்தெந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தங்க நகை சேமிப்பு திட்டம் பெரும்பாலும் அனைத்து நகைக்கடைக்காரர்களாலும் வழங்கப்படுகிறது. இது தனி நபர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சேமிக்க உதவும் சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்திற்கு மாதத் தவணையாக நீங்கள் பணம் செலுத்தலாம். பெரும்பாலும் 10 முதல் 12 மாதங்கள் வரை குறிப்பிட்ட கட்டணத்தை மாதம் மாதம் நகைக்கடைகளில் முதலீடு செய்ய முடியும். மேலும் அவ்வாறு செலுத்தி முடித்த பிறகு வாடிக்கையாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெறுவார்கள். கூடுதலாக போனஸ் தொகைகள் மற்றும் தள்ளுபடிகள் ஆகியவற்றையும் சில நகைக்கடைகள் வழங்குகின்றன. ஆக மொத்தமாக நீங்கள் முதலீடு செய்த பணம் மற்றும் நகை கடையில் இருந்து பெற்ற குறிப்பிட்ட சதவீத தொகை இரண்டிற்கும் சேர்த்து நீங்கள் முடிவில் நகைகளாகவோ அல்லது காயின்களாகவோ வாங்கிக் கொள்ளலாம். இதுதான் தங்க நகை சேமிப்பில் நடக்கும் பொதுவான விஷயம்.
தங்க நகை சேமிப்பு திட்டங்களில் ரூ. 5,000 முதல் முதல் ரூ. 5 லட்சம் வரை 10 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். அதே போல முதிர்வு காலத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு கூடுதலாக நீங்கள் தேர்ந்தெடுத்த கால அளவை பொறுத்து போனஸ் கிடைக்கும். உதாரணமாக ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதங்களுக்கு 55 % போனஸ் (அதாவது 2.75 லட்சம்) 11 மாதங்களுக்கு 65 % (ரூ.3.25 லட்சம்) மற்றும் 12 மாதங்களுக்கு 75 % (ரூ.3.75 லட்சம்) போனஸ் கிடைக்கும். இது மேலோட்டமாக பார்ப்பதற்கு லாபகரமானதாகத் தோன்றலாம். ஆனால் உன்னிப்பாக கவனித்தால் இந்த திட்டத்தின் உள் வருவாய் விகிதம் (IRR) எனப்படுவது வெறும் 1 சதவீதம் மட்டுமே.
அது என்ன உள் வருவாய் விகிதம்.. இதனை ஆங்கிலத்தில் "Internal Rate of Return" என்று கூறுவார்கள். ஒரு முதலீட்டின் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டி உள்ளோம் என்பதைக் கணக்கிடுவதற்கு இந்த IRR ரேட் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக நீங்கள் ரூ. 10,000 ரூபாய் முதலீடு செய்து இருக்கிறீர்கள்.. என்று வைத்துக் கொள்வோம். ஓராண்டுக்குப் பின்னர் அந்த முதலீடு ரூ. 15,000 ஆக மாறுகிறது. இதன் மூலம் நீங்கள் பெற்ற வருமானம் ரூ. 5000 ரூபாய்.
இதற்கான IRR விகிதத்தை எப்படி கணக்கிடுவது என்பதைப் பார்ப்போம். அதற்கு நீங்கள் உங்களுக்கு கிடைத்த வருமானத்தை உங்கள் முதலீட்டின் மூலம் வகுக்க வேண்டும். அதன் பின்னர் 100-இல் பெருக்கினால் IRR விகிதம் கிடைத்துவிடும்.
IRR = ஆண்டு வருமானம் / முதலீடு தொகை *100
மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை வைத்து பார்த்தால்
5000 / 10,000 * 100 = 50%
சென்செக்ஸ் கடந்த ஆண்டில் 12% லாபம் தந்த நிலையில், தங்கம் 16 % லாபம் அளித்துள்ளது. இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக FD திட்டங்களில் முதலீடு செய்யலாம். FD திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது 7 முதல் 8 சதவீத வரை லாபம் பெறலாம். இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக உங்கள் வருமானத்தை அதிகரிக்க SIP முதலீடுகள் அல்லது RD-யை தொடங்குவது நல்லது. முதலீடு உங்கள் நோக்கமாக இருந்தால் சந்தையில் இன்னும் பல மாற்று வழிகள் உள்ளன. அவற்றை தேடி ஆராய்ந்து உங்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டங்களைத் தொடங்குங்கள்.
மறைந்திருக்கும் சிக்கல்கள்: இந்தத் திட்டத்தின் மூலம் பணத்தைத் திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படுவதில்லை. நகைக்கடை லாபத்திற்காக, நகைகளை வாங்க வேண்டியிருக்கும். இதில், உருக்குக் கூலி மற்றும் சேதாரம் போன்ற காரணங்களால் இழப்பு ஏற்படலாம்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

உக்கிரமடையும் ஈரான் போர்: தங்கம், வெள்ளி விலை எவ்வளவு வரை உயரும்? இப்போது நகை வாங்கலாமா வேண்டாமா?



Click it and Unblock the Notifications