100 ரூபாய்க்கு ஒரு பவுன் தங்கம்.. வைரலாகும் நகை கடை பில்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் வாங்கத் திட்டமிடும் அனைவரையும் பயமுறுத்தும் வகையில் தங்கம் விலை விண்ணைத் தொட்டு உள்ளது. இதனால் தங்கம் மற்றும் தங்க நகை வாங்குவோரின் பாக்கெட்டில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

தங்கத்தைச் சேமிப்பில் இருந்து வாங்குவதைத் தாண்டி இன்றைய நிலையில் முக்கியமான கட்டத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்ற நெருக்கடி வரும் வங்கியில் கடன் வாங்கித் தங்க நகை வாங்கும் நிலையில் தான் தங்கம் விலை உள்ளது.

இந்த நிலையில் 60 வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்கிய ஒரு பில் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.

புது உச்சத்தைத் தொட்ட தங்கம்.. சென்னை, கோவை, மதுரையில் விலை என்ன..?! புது உச்சத்தைத் தொட்ட தங்கம்.. சென்னை, கோவை, மதுரையில் விலை என்ன..?!

தங்கம் விலை

தங்கம் விலை

தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் இந்தியாவில் வாங்குவோர் எண்ணிக்கையும், அளவும் தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தங்கத்தை இந்திய மக்கள் வெறும் பொருளாகப் பார்க்காமல் ஒரு முதலீடு, சேமிப்பாகப் பார்க்கின்றனர். இதனாலேயே நீண்ட கால முதலீடாகக் கருதித் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

வரலாற்று உச்ச அளவு

வரலாற்று உச்ச அளவு

இன்று தங்கம் விலை அதன் வரலாற்று உச்ச அளவான 56,341 ரூபாய் விலையில் இருந்தாலும், ஒரு காலத்தில் தங்கம் விலை ஆச்சரியப்படும் அளவில் இருந்துள்ளது. சொல்லப்போனால் ஒரு சாக்லேட் வாங்கும் பணத்திற்கு ஒரு கிராம் தங்கம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

60 ஆண்டுப் பழமையான பில்

60 ஆண்டுப் பழமையான பில்


தங்கம் விலை வரலாற்றைப் பார்க்கும் போது நமக்கு இது தெரிந்தாலும், இதை நிரூபணம் செய்யும் வகையில் தங்கம் வாங்கிய பில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கம் விலை எப்படி இருந்தது என்பதை உறுதி செய்யும் வகையில் 60 ஆண்டுப் பழமையான பில் ஒன்று இணையத்தில் வெளியாகி தங்கம் எவ்வளவு மலிவானது என்று காட்டியுள்ளது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சாக்லேட் விலையை விடக் குறைவாக இருந்தது என்பதை 1959 ஆம் ஆண்டுத் தங்க நகை வாங்கப்பட்ட பில் காட்டுகிறது. இந்தப் பில் ஹிந்தி மொழியில் உள்ளது. இந்தப் பில்-லில் என்ன இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

1 தோலா தங்கம்

1 தோலா தங்கம்

1 தோலா அதாவது 11.66 கிராம் தங்கத்தின் விலை 113 ரூபாய் என் இந்த 1959 ஆம் ஆண்டுப் பில் காட்டுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் சுமார் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரு சாக்லேட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் பணவீக்க அளவில் கணக்கிட்டால் அன்றைய 10 ரூபாய் இன்று 3000 முதல் 4000 ரூபாய் வரையில் மதிப்பிடப்படும்.

அரைக் கிலோ

அரைக் கிலோ

இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 5,172 ரூபாயாக உள்ளது. அதே பணத்தில், மக்கள் அப்போது 533 கிராமுக்கு மேல் தங்கம் வாங்க முடியும், அதாவது கிட்டத்தட்ட அரைக் கிலோ. மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாமன் நிம்பாஜி அஷ்டேகர் என்ற கடையின் பில் இது.

909 ரூபாய்க்குத் தங்கம், வெள்ளி

909 ரூபாய்க்குத் தங்கம், வெள்ளி

இந்த 1959 ஆம் ஆண்டுப் பில்-லில் வெள்ளியின் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பில்லில் ஷிவ்லிங் ஆத்மாராம் என்ற வாடிக்கையாளர் 621 ரூபாய்க்கு தங்கத்தையும், 252 ரூபாய்க்கு வெள்ளி என மொத்தம் 909 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அன்றைய மொத்த பில் தொகையில் இன்று 12 கிராம் வெள்ளி மட்டுமே வாங்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold silver chennai
English summary

Jewellery bill from 1959 trending in social media; Check Gold and silver price fascination history

Jewellery bill from 1959 trending in social media; Check Gold and silver price fascination history
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X