தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்வது குறித்து கடந்த 5 வருடத்தில் மாறுப்பட்ட கண்ணோட்டம் நிலவி வருகிறது. ஆனால் பெரும் பணக்காரர்களும், முதலீட்டு நிறுவனங்களும், உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தையும், வெள்ளியும் தொடர்ந்து வாங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நாணய சந்தையில் தடுமாற்றம் அதிகரிக்கும் போது தங்கம் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் உலகளவில் புகழ்பெற்ற முதலீட்டாளர் மற்றும் பொருளாதார வல்லுனரான ஜிம் ரோஜர்ஸ், வெள்ளி மீதான தனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி மீது இவருடைய நம்பிக்கை உங்களுடைய போர்ட்போலியோவை மறுசீரமைப்பு செய்யவும் உதவும்.

ஜிம் ரோஜர்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் தங்கம் மற்றும் வெள்ளியை தொடர்ந்து வைத்திருப்பதாகவும், இவை தனது குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள சொத்துக்களில் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளிக்கு பொதுவாகவே பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அளிக்கும் முக்கியமான கருவியாக இருக்கும் வேளையில், ஜிம் ரோஜர்ஸ்-ன் எதிர்கால திட்டமும் இதேயே பிரதிபலிக்கிறது.
மேலும் ஜிம் ரோஜர்ஸ் தனது பேட்டியில் கடந்த வாரம் தங்கத்தை விடுத்து கூடுதலாக வெள்ளியை வாங்கியதாகவும், அதன் விலை குறைவாக இருந்தால் தொடர்ந்து வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது புதிய முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது.
இதோடு ஜிம் ரோஜர்ஸ் தங்கத்தையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டாலும், தற்போது தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் அதை வாங்க மாட்டேன் என்று தெளிவுபடுத்தினார். மாறாக, வெள்ளியின் விலை குறைவாக உள்ளதால் தற்போது மிகவும் ஈர்ப்புடைய முதலீடாக உள்ளது என்று அவர் விளக்கினார்.
"நான் தங்கம் வைத்திருக்கிறேன், ஆனால் அதை வாங்கவில்லை. இதேவேளையில் வெள்ளி விலை குறைந்துள்ளதால் அதை வாங்குகிறேன்" என்று அவர் தனது முதலீட்டு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். இந்த அணுகுமுறை, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க சந்தை நிலைமைகளை பொறுத்து முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொருடைய நிதியியல் தேவைக்கும், இலக்கிற்கும் ஏற்றப்படி விருப்பம் மாறுப்படும்.
ஜிம் ரோஜர்ஸ், வெள்ளியையும் தங்கத்தையும் தனது குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள குடும்ப சொத்துக்களாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இது வெள்ளியை அவர் நீண்டகால முதலீடு மற்றும் பாதுகாப்பு சொத்தாக பார்ப்பதை தெளிவுப்படுத்துகிறது. இதேபோல், Rich Dad, Poor Dad புத்தக எழுத்தாளரும், புகழ்பெற்ற முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகியும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய பரிந்துரைக்கிறார், இது இந்த உலோகங்களின் மதிப்பை உறுதிப்படுத்துகிறது.
வெள்ளி, தங்கத்தை விட விலை குறைவாக உள்ளதால், இது பல முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான தேர்வாக உள்ளது. தங்கம் விலை இந்திய சந்தையில் ஜூலை 24ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 251 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 9982 ரூபாயாக உள்ளது. இதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 9150 ரூபாயாக உள்ளது.
மேலும் வெள்ளி விலை கடந்த 6 நாட்களில் கிலோவுக்கு 3000 ரூபாய் குறைந்துள்ளது, இன்று ஒரு கிலோ தங்கம் விலை 1,26,000 ஆக உள்ளது.
More From GoodReturns

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?



Click it and Unblock the Notifications