ஜியோ நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக "ஹேப்பி நியூ இயர் 2.0" என்பதன் கீழ் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டங்கள் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி, 100 எஸ்எம்எஸ் வசதி ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது. எந்தெந்த பிளானுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதைப் பார்ப்போம்.
28 நாள் வேலிடிட்டி கொண்ட 399 ரீசார்ஜ் பிளான்: ஜியோ நிறுவனம் ரூ. 399 என்ற விலையில் புதிய ரீசார்ஜ் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் கால், தினமும் 100 SMS போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறது.

அதோடு கூடுதல் சலுகைகளாக ரூ. 4000 மதிப்புள்ள 12 மாதங்களுக்கான கேன்வா ப்ரோ சப்ஸ்கிரிப்ஷன், ஜியோ டிவி ஃபேன்கோட் அக்சஸ், ஜியோ கேம்ஸ் மொபைல் மற்றும் 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
ரூ.3,999 ரீசார்ஜ் பிளான்: நீண்ட நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த அனுவல் ரீசார்ஜ் பிளான் உதவிகரமானதாக இருக்கும். இதில் பயனர்களுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் 4ஜி, 5ஜி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய அடிப்படை சலுகைகள் வழங்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக ரூ.1590 மதிப்புள்ள 12 மாத கேன்வா ப்ரோ லைட் சப்ஸ்கிரிப்ஷன், ஹாலிவுட் படங்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல், ஜியோ டிவி ஃபேன் கோட் ஆக்ஸஸ் மற்றும் 50 ஜிபி ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
டேட்டா பேக்குகள்: ஜியோ நிறுவனம் 15 ரூபாய்க்கு ஒரு நாளைக்கும், 25 ரூபாய்க்கு 2 நாட்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது. இதில் டவுன்லோட் லிமிட் கிடையாது. அதோடு இன்டர்நெட் வேகமும் குறைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 50 ரூபாய்க்கு இரவு நேர டேட்டா பேக்கையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 28 நாட்களுக்கு தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்வதால் பயனர்கள் ஏற்கனவே செய்திருக்கும் ரீசார்ஜ் பிளானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இரவு நேரங்களில் டவுன்லோட் செய்பவர்கள், கேம் விளையாடுபவர்களுக்கு இந்த பேக் பயனுள்ளதாக இருக்கும். ரூ.399, ரூ.3999 மற்றும் ரூ.25 ஆட் ஆன் டேட்டா பேக் ஆகியவை நவம்பர் 24ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 50 ரூபாய் இரவு நேர டேட்டா பேக் நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் மை ஜியோ ஆப் அல்லது Jio.com இணையதளம், ஜியோ ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதிலும் இருக்கும் ரீடைல் ஷாப்களில் இந்த புதிய ரீசார்ஜ் பிளானை பெறலாம்.


Click it and Unblock the Notifications
