முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ பிளாட்பார்ம்ஸ் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை மட்டும் அல்லாமல் பல புதிய சேவைகளையும் அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் பல தொழில்நுட்ப சேவைகளை உருவாக்கினாலும் பல புதிய தொழில்நுட்பத்தில் சேவைகளை அறிமுகம் செய்யப் பல நிறுவனத்தைக் கைப்பற்றி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ஜியோ பிளாட்பார்ம்ஸ் தற்போது அமெரிக்க நிறுவனத்தின் ஒன்றில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ்
ஜியோ பிளாட்பார்ம்ஸ் அமெரிக்காவின் டூ பிளாட்பார்மஸ் இன்க் இன்னும் நிறுவனத்தில் 25 சதவீத பங்குகளுக்குச் சுமார் 15 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே சில வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது டூ பிளாட்பார்ம்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.
டூ பிளாட்பார்ம்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், 5ஜி எனப் பல புதிய தொழில்நுட்பத்தில் சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. ஜியோவின் கனவுகளைப் பூர்த்திச் செய்வதில் டூ பிளாட்பார்மஸ் இன்க் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக டூ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் ஒகு ஸ்பெஷல் உண்டு.
பிரணவ் மிஸ்திரி
சில வருடங்களுக்கு முன்பு சிக்ஸ்த்சென்ஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் டெக் உலகை புரட்டிப்போட்ட பிரணவ் மிஸ்திரி உருவாக்கிய நிறுவனம் தான் இந்த டூ பிளாட்பார்மஸ் இன்க், இந்த நிறுவனத்தில் ஜியோ 25 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் பல புதிய சேவைகளை இந்தியாவிற்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு வர முடியும்.
ஆகாஷ் அம்பானி
டூ பிளாட்பார்மஸ் இன்க் நிறுவனத்தின் AI/ ML, AR, மெட்டாவெர்ஸ், வெப் 3.0 போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணறிவு, இம்மெர்சிவ் கேமிங், மெட்டவெர்ஸ் ஆகியவற்றில் புதிய சேவைகளை அறிமுகம் செய்ய முடியும் என ஜியோ பிளாட்பார்ம்ஸ் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications