இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிதி சேவை துறையில் இறங்க பல மாதங்களாக திட்டமிட்டு வரும் வேளையிலும், இத்துறை சேவைக்காக தனி நிறுவனத்தையும் உருவாக்கி அதை பங்குச்சந்தையிலும் பட்டியலிட திட்டமிட்டு இருக்கும் வேளையில் ஜியோ NBFC நிறுவனத்தின் சோதனை திட்டம் துவங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஜியோ வெற்றி பெயராக மாறியிருக்கும் வேளையில், புதிய வர்த்தகங்களுக்கு ஜியோ பெயரை வைத்து வருகிறது. ஜியோ மார்ட், ஜியோ வோர்ல்டு சென்டர், ஜியோ மால் இதை தொடர்ந்து NBFC பிரிவில் உருவாக்கப்பட்டு உள்ள ஜியோ பைனான்சியல் சர்வீசஸ்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல்வேறு வர்த்கக பிரிவில் அளித்து வந்த பல்வேறு நிதி சேவைகள், வர்த்தகம், வாடிக்கையாளர்களை தனியாக பிரித்து உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் இந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், இது மொத்தமாக தற்போது கன்ஸ்யூமர் வர்த்தகத்தை குறிவைத்து இயங்க முடிவு செய்துள்ளது.
இதன் படி ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கன்ஸ்யூமர் பைனான்ஸ் ப்ரோகிராம்-ன் சோதனை திட்டத்தை துவங்கியுள்ளது. இந்த சோதனைகளை தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் பெரிய அளவில் செய்து வருகிறது.
அதாவது ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் டிவி, லேப்டாப் என எந்த எலக்ட்ரானிக்ஸ் அல்லது எல்க்ட்ரானிக் பொருட்களை வாங்கினாலும் அதற்கு EMI வசதி செய்துக்கொடுக்கப்படுகிறது.
ஏற்கனவே ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பின்சர்வ், ஹெச்டிஎப்சி வங்கி உட்பட பல நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி அதை EMI வாயிலாக வசூலிக்கும் சேவையை அளிக்கிறது, இதனிடையில் தற்போது ஜியோ NBFC சேவைகளையும் இணைத்துள்ளது.
முதல் கட்டமாக ஜியோ NBFC வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி, சலுகைகளை வழங்கி ஈர்க்க திட்டமிட்டு உள்ளது. இதேபோல் தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டலில் துவங்கப்பட்ட இந்த கடன் சேவைகள் விரைவில் டெலிகாம், FMCG வர்த்தகத்திற்கு விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் இந்தியாவில் சுமார் 20000 கிளைகளை கொண்டு உள்ளது. ஜியோ NBFC வருகை மூலம் இத்துறையில் இருக்கும் பஜாஜ் பின்சர்வ், poonawalla fincorp போன்று கன்ஸ்யூமர் பொருட்களுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களுக்கு பெரிய போட்டியும் பாதிப்பும் உருவாகியுள்ளது. பஜாஜ் பின்சர்வ் சேவை குறித்து ஏற்கனவே வாடிக்கையாளர் மத்தியில் பல விமர்சனங்கள் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications