இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை நீண்ட காலமாகவே இருந்தாலும், சமீபத்தில் அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் வரையில் ஆடம்பர பொருட்களுக்கான டிமாண்ட் கூடியுள்ளது. இதை கூர்ந்து கவனித்த முகேஷ் அம்பானி இந்தியாவில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை அனைத்தும் தன்வசம் இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்தார்.
இதன் படி முதல் முறையாக அமெரிக்காவின் ஆடம்பர நகை விற்பனை நிறுவனமான Tiffany & Co-வின் இந்திய வர்த்தகத்தின் மாஸ்டர் பிரான்சைஸ் வாங்கியதில் இருந்து முகேஷ் அம்பானியின் ஆடம்பர சந்தை வர்த்தகத்தை ஈர்ப்பதற்கான பாதையை துவங்கினார்.

இன்று ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 20க்கும் அதிகமான ஆடம்பர பிராண்டுகளின் இந்திய வர்த்தக உரிமைகளும், முதலீடுகளும் உள்ளது. சரி எல்லாம் வாங்கியாச்சு, இதை விற்பனை செய்ய கடை வேண்டாமா..?
சும்மா இருப்பாரா முகேஷ் அம்பானி இதுவரையில் இந்திய பணக்காரர்கள் யாரும் பார்த்திடாத வகையில் ஆடம்பரத்தின் உச்சத்தை தொடும் வகையில் ஆடம்பர பிராண்டுகளை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது ஜியோ வேர்ல்ட் பிளாசா.

சமீப காலமாக முகேஷ் அம்பானி ரியல் எஸ்டேட் துறையிலும் கட்டுமானத்திலும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து வரும் வேளையில் மும்பையில் மிகவும் பிரபலமான பந்திரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் ஜியோ வேர்ல்ட் பிளாசா TVS உடன் இணைந்து கட்டப்பட்டு உள்ளது.

TVS என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சர்வதேச கட்டிடகலை மற்றும் டிசைன் நிறுவனமாகும். தாமரை மலரை அடிப்படையாக வைத்து இயற்கையின் மகிமையை பிரதிபலிக்கும் வகையில் ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து TVS ஜியோ வேர்ல்ட் பிளாசா- வடிவமைத்து கட்டியுள்ளது.

ஜியோ வேர்ல்ட் பிளாசா 4 அடுக்கு மாடி கட்டிடம் சுமார் 7.5 லட்சம் சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மாலில் சுமார் 66 ஆடம்பர பிராண்டுகள் உள்ளது, இதுவரையில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்காத பல பிராண்டுகள் ஜியோ வேர்ல்ட் பிளாசா-வில் நேரடி விற்பனை கடையை திறந்துள்ளது.
அனைத்திற்கும் மேலாக முகேஷ் அம்பானி மிகவும் ஸ்மார்ட்டாக சமீபத்தில் நீதா அம்பானி ஆசைக்காக திறக்கப்பட்ட Nita Mukesh Ambani Cultural Centre (NMACC), ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர், ஜியோ வேர்ல்ட் கார்டன் ஆகியவற்றுடன் இந்த ஜியோ வேர்ல்ட் பிளாசா இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த இடத்திற்கு வந்தாலும் ஜியோ வேர்ல்ட் பிளாசா-க்குள் பணக்கார வாடிக்கையாளர்களை ஈர்க்கும் அளவுக்கு திட்டமிட்டு பேஷன் - கலை - வர்த்தகத்தை இணைத்துள்ளார் முகேஷ் அம்பானி.



Click it and Unblock the Notifications