இந்தியாவின் நிதியியல் தலைநகரமான மும்பையில் புதிய அடையாளமாக மாறியுள்ளது ஜியோ வேர்ல்ட் பிளாசா, இந்தியாவின் பெரும் பணக்காரர்களையும், ஆடம்பர சந்தையை இணைக்கும் முயற்சியாக உருவாக்கப்பட்டது தான் இந்த Jio World Plaza.
இந்திய பணக்காரர்கள் வெளிநாட்டுக்கு சென்று ஆடம்பர பிராண்ட் பொருட்களை அதிகளவில் வாங்குவது இந்த ஒரு மால் மூலம் குறையும் என்றால் மிகையில்லை. முகேஷ் அம்பானி மாபெரும் திட்டத்துடன் பணக்கார வாடிக்கையாளர்களை மொத்தமாக இணைக்கும் பொருட்டு ஆடம்பரத்தின் உச்சத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த Jio World Plaza-வை இன்று நட்சத்திர பட்டாளத்திற்கு மத்தியில் முகேஷ் அம்பானி குடும்பம் திறந்து வைத்தது.

ஆடம்பரம், ஆடம்பரம் என தொடர்ந்த கூறுவதற்கு முக்கியமாக காரணம் ஜியோ வேர்ல்ட் பிளாசா மாலில் இருக்கும் கடைகளும், பிராண்டுகளும் அப்படிப்பட்டது. 7.5 லட்சம் சதுரடியில் அமைந்துள்ள இந்த 4 மாடி கட்டிடத்தில் சுமார் 66 ஆடம்பர பிராண்டுகள் கடைகளை அமைத்துள்ளது. 66-ம் ஆடம்பர பிராண்டுகள்.
இதில் முதல் முறையாக இந்தியாவுக்கு தனது ரீடைல் வர்த்தகத்தை அறிமுகம் செய்யும் Balenciaga, the Giorgio Armani Café, Pottery Barn Kids, Samsung Experience Centre, EL&N Café, Rimowa ஆகியவை அடக்கம். இந்த பிராண்டுகள் ஏற்கனவே அதிகப்படியான இந்திய வாடிக்கையாளர்களை பெற்றுள்ள வேளையில் ஜியோ வேர்ல்ட் பிளாசா-வை முக்கிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.
இதேபோல் ஜியோ வேர்ல்ட் பிளாசா-வில் Valentino, Tory Burch, YSL, Versace, Tiffany, Ladurée, Pottery Barn ஆகிய பிராண்டுகள் கடைகள் திறந்தது மூலம் முதன் மும்பை கடைகள் அறிமுகம் செய்துள்ளது. இதோடு ஆடம்பர சந்தைக்கே பெயர்போன Louis Vuitton, Gucci, Cartier, Bally, Giorgio Armani, Dior, Bulgari ஆகியவை ஜியோ வேர்ல்ட் பிளாசா-வில் கடையை விரித்துள்ளது.
இதேபோல் இந்திய ஆடம்பர ஆடை வடிவமைப்பாளர்களின் மனிஷ் மல்ஹோத்ரா, அபு ஜானி-சந்தீப் கோஸ்லா, ராகுல் மிஸ்ரா, ஃபால்குனி மற்றும் ஷேன் பீகாக், மற்றும் ரி பை ரிது குமார் பிராண்டுகளும் கடையை திறந்துள்ளது.
இது ஒருபக்கம் இருக்க ஜியோ வேர்ல்ட் பிளாசா மால்-க்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் ஷாப்பிங் அசிஸ்டென்ஸ், விஐபி வரவேற்பாளர், டாக்ஸி ஆன் கால், வீல்சேர் சேவை, ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஷாப்பிங், பேகேஜ் டிராப், பட்லர் சேவைகள், குழந்தைகளை அழைத்து செய்ய ஸ்ட்ரோலர் சேவைகளும் அளிக்கப்படுகிறது.
இருங்க இருங்க இன்னும் முடியல.. அனைத்து மால்களிலும் இருப்பது போல் ஜியோ வேர்ல்ட் பிளாசா-விலும் ஆடம்பர மல்டிபிளெக்ஸ் தியோட்டர், கோர்மெட் உணவகமும் உள்ளது. ஷாப்பிங் முடிச்சுட்டு படம் பார்த்துவிட்டு இரவு டின்னரையும் முடித்து விடலாம்.
ஆனால் இதையெல்லாம் அனுபவிக்க சில பல லட்சங்கள் வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications