ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 46வது வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றி அறிவித்தார்.
இக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி எங்கள் குழுமத்தின் புதிய நிறுவனமான JFSL ஐ அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், RIL இன் ஒவ்வொரு பங்குதாரரும் 1:1 அடிப்படையில் JFS இல் பங்குகளைப் பெற்றுள்ளனர். இது எங்கள் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மினி போனஸ் போன்றது என்று முகேஷ் அம்பானி கூறினார்.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் உருவாக முக்கியமான காரணம், இந்திய நிதியியல் சந்தையில் இருக்கும் கேப்-ஐ அடைக்கவும், டிஜிட்டல் மாதிரியை அடிப்படையாக கொண்டு இந்திய நிதி சேவை துறையில் வேகமாக வளர்ச்சி அடைய உருவாக்கப்பட்டு உள்ளது. JFS இந்தியாவில் மலிவு விலை நிதியியல் சேவைகளை அளிப்பதை இலக்காக கொண்டு உள்ளது.
அசர்ட் மேனேஜ்மென்ட் பிரிவு சேவைக்காக பிளாக்ராக் உடன் கூட்டணி சேர்ந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் பிரிவில் புதிய திட்டங்களை அறிவிக்க இதேபோன்ற திட்டத்தை அறிவிக்க புதிய கூட்டணியும், சிறு நிறுவனங்களுக்கான கடன்களை அளிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
இதேபோல் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் பேமெண்ட்ஸ் சேவை பிரிவில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் மத்தியிலான தளத்தை தொடர்ந்து மேம்படுத்த உள்ளது. இதேபோல் பேமெண்ட் பிரிவில் பிளாக்செயின் மற்றும் CBDC சேவைகளையும் கொண்டு வரும் முயற்சியில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் இறங்கியுள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தக முடிவில் 1.10 சதவீதம் சரிந்து 212.15 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications