முகேஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்.. பிளிப்கார்ட், அமேசான் உடன் போட்டி போட தயாராகும் 'ஜியோமார்ட்'..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி டெலிகாம் துறையைத் தொடர்ந்து ரீடைல் துறையில் வர்த்தக விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளார். இந்திய ரீடைல் சந்தையில் ஏற்கனவே முன்னணி நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ரீடைல் சில மாதங்களுக்கு முன்பாக ஆன்லைன் வர்த்தகத்திற்கு இறங்கியது.

Recommended Video

Flipkart, Amazon உடன் போட்டி போட தயாராகும் Jiomart

ரிலையன்ஸ் ரீடைல் பிரிவின் கீழ் இயங்கும் ஈகாமர்ஸ் தளமாக ஜியோமார்ட் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் முழுவீச்சில் இயங்க துவங்கியுள்ள நிலையில், அடுத்தகட்ட வர்த்தகத்திற்காகவும், வர்த்தகாகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் இந்த முடிவு இந்தியாவில் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்பட்ட உள்ளது.

ஜியோமார்ட்

ஜியோமார்ட்

பொதுவாக இந்திய ஈகாமர்ஸ் தளத்தில் பண்டிகை காலத்தில் அதிகளவிலான தள்ளுபடிகளும், சலுகைகளும் வழங்கப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகை காலத்தில் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதே பண்டிகை காலத்தில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ஆஸ்தான ஈகாமர்ஸ் தளமான ஜியோமார்ட் தளத்தில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களைத் தாண்டி ஆடை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை பிரிவுகளை விற்பனைக்காக அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

 

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

தற்போது ஜியோமார்ட்-ல் வரும் ஆர்டர்கள் அனைத்தும் அருகில் இருக்கும் கடைகள் மற்றும் ரீடைல் கடைகள் மூலம் இணைந்து வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை டெலிவரி செய்து வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களும் மிகவும் குறைந்த காலகட்டத்தில் பொருட்களை டெலிவரி செய்யும் முயற்சியில் ரிலையன்ஸ் ரீடைல் முயற்சி செய்து வருகிறது.

புதிய முயற்சி

புதிய முயற்சி

தற்போது ரீலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் ரீடைல் முக்கிய வர்த்தகப் பிரிவாகப் பார்க்கப்படும் நிலையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உடன் போட்டி போட வேண்டும் என்றால் நிச்சயம் ஹைப்ர்லோக்கல் மற்றும் கிடங்கு மாடல் வர்த்தக முறையில் கையில் எடுக்க வேண்டும்.

இதைத் தான் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் அடுத்தகட்ட முயற்சியாகச் செய்யப்போகிறது என ரீடைல் வர்த்தக வல்லுனர் தெரிவித்தார்.

 

இலக்கு

இலக்கு

ரிலையன்ஸ் ரீடைல் தற்போது இந்தியாவில் பெரு நகரங்கள் முழுவதும் இருக்கும் நிலையில் மளிகை பொருட்கள், ஆடைகள், டிவி மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை ஆர்டர் செய்யப்பட்ட அதிகப்படியாக அடுத்த 2 மணிநேரத்தில் டெலிவரி செய்யவும், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற பெரிய பொருட்களை அதேநாள் அல்லது அடுத்த நாளுக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்பது தான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் இலக்காக உள்ளது.

விலை போர்

விலை போர்

அமேசான், பிளிப்கார்ட் மத்தியில் இருக்கும் விலை போர் குறித்து ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கு எவ்விதமான அச்சமும் இல்லை, காரணம் இந்தியாவிலேயே மிகவும் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்வது ரிலையன்ஸ் ரீடைல் தான் என்றும் ரிலையன்ஸ் நிர்வாகம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மும்பை

மும்பை

தற்போது மும்பையில் மட்டும் ரிலையன்ஸ் சுமார் 2,500 கடைகளுடன் பொருட்களை டெலிவரி செய்ய இணைந்துள்ளது. இந்த எண்ணிக்கையை 6000 வரையில் அதிகரித்து அதை ஜியோமார்ட் உடன் இணைக்கத் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் பணியாற்றி வருகிறது.

ஆர்டர் எண்ணிக்கை

ஆர்டர் எண்ணிக்கை

ஜியோமார்ட் தற்போது தினம்தோறும் 50,000 முதல் 70,000 ஆர்டர்களைப் பெற்று வரும் நிலையில் தாண்டி ஆடை, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை விற்பனைக்குக் கொண்டு வருவதன் மூலம் மிகப்பெரிய வர்த்தக வளர்ச்சியை ஜியோமார்ட் அடையும் என்பது தான் உண்மை.

ரீடைல் சாம்ராஜ்ஜியம்

ரீடைல் சாம்ராஜ்ஜியம்

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள்: 1.4 லட்சம் பேர்
மொத்த கடைகள்: 11,800 கடைகள் இந்தியா முழுவதும்
விற்பனை பிரிவுகள்: உணவுப் பொருட்கள், மளிகை பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், பேஷன், லைப்ஸைட்ல், நகைகள்
வாடிக்கையாளர் எண்ணிக்கை: 640 மில்லியன் வாடிக்கையாளர்கள் (2020 நிதியாண்டில்), 125 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள்
வளர்ச்சி: 40 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி

வருடாந்திர வர்த்தகம்

வருடாந்திர வர்த்தகம்

2019-20ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ரீடைல் சுமார் 20 மில்லியன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களையும், 160 மில்லியன் ஆடைகளையும், 2.6 பில்லியன் மளிகை பொருட்களையும் விற்பனை செய்து நாட்டின் முன்னணி ரீடைல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+