அமெரிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோடீஸ்வரர்களில் ஒருவர் John Collins-Black, இவர் தனது பணத்தை பிட்காயின் வாயிலாக முதலீடு செய்து பெரும் தொகையைக் குவித்த நிலையில், இதை மக்களுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் இதை வித்தியாசமாக ஒரு புதிர் விளையாட்டு முறையில் அளிக்க முடிவு செய்தார்.
அமெரிக்கா முழுவதும் சுமார் ரூ.17 கோடி மதிப்புள்ள பொக்கிஷங்களை புதைத்து வைத்துள்ளார். இதன் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 மில்லியன் டாலராகும். இந்த 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை 5 பெட்டியில் பிரித்து 5 இடத்தில் புதைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் John Collins-Black.

இந்த புதைக்கப்பட்ட பெட்டியில் கப்பல் சிதைவுகளில் இருந்து மீட்கப்பட்ட தங்க நாணயங்கள், அரிய போகிமான் கார்டுகள், ஒரு பிட்காயின், ஜாக்லின் ஒன்னாசிஸ் அணிந்திருந்த வைர மற்றும் நீலக்கல் பிரோச், கி.மு. நான்காம் நூற்றாண்டு கிரேக்க லாரல், பிகாசோ வடிவமைத்த நாணயம், மைக்கேல் ஜோர்டானின் 1986 ஆம் ஆண்டு ரூகி கார்டு மற்றும் நிலவு பாறை துண்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்தப் பொக்கிஷங்களில் அடங்கியுள்ளன.
இந்த புதையலைத் தேடுபவர்களுக்கு வழிகாட்டும் வகையில், "தெரஸ் ட்ரெஷர் இன்சைடு" ("There's Treasure Inside") என்ற புத்தகத்தை ஜான் காலின்ஸ் பிளாக் எழுதியுள்ளார். 5 புதையல் பெட்டிகளை அடைய புதிர்கள், வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் நிறைந்துள்ளது இந்த புத்தகத்தில்.
இந்த புதையலை கண்டுப்பிடிக்க புதிர்களுக்கான க்ளூக்களை கண்டறிந்து தீர்க்கப்பட வேண்டும். ஆனால் புதிர்களைத் தீர்க்க அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை, ஆனால் ஆர்வம், கற்பனை மற்றும் புதிய ஒன்றை முயற்சி செய்யும் விருப்பம் இருந்தால் போதுமானது என்று ஜான் காலின்ஸ் பிளாக் தெரிவித்துள்ளார்.
மேலும் புதையலை தேடி செல்லும் மக்களுக்கு பாதுகாப்பு அம்சமாக, புதைக்கப்பட்ட பொக்கிஷங்கள் பொது சாலைகளிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் மட்டுமே இருக்கிறது என்ற முக்கிய க்ளூ- ஒன்றையும் தெரிவித்துள்ளார். இதனால் புதையல் அனைத்து தரப்பு மக்களும் தேடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு உள்ளது. பொக்கிஷம் தேடுபவர்களுக்கு எந்த இடமும் ஆபத்தை விளைவிக்காது என்றும் ஜான் காலின்ஸ் பிளாக் உறுதியளித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றுநோயின் போது திட்டமிட்டு இந்த பணியைச் செய்துள்ளார் ஜான் காலின்ஸ் பிளாக். இது ஒரு டிரஷர் ஹண்ட் என்பதால் உலகெங்கிலும் உள்ள டிரஷர் ஹண்ட் ஆர்வலர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்திற்கும் பின்னால் இருப்பது அந்த புத்தகம், இந்த புத்தகத்தை விற்பனை செய்யவும், மக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தவும் தான் இத்தகைய பணியை ஜான் காலின்ஸ் பிளாக் செய்துள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?



Click it and Unblock the Notifications