வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி மிகவும் முக்கியம். இருப்பினும் பள்ளி படிப்பை கூட தாண்டாத ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு வெற்றியாளர் தான் இந்தியா உள்பட 60 நாடுகளில் பிரபல சங்கிலித் தொடர் நகை விற்பனை நிலையங்களை நடத்தி வரும் ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜாய் ஆலுக்காஸ்.
பள்ளி படிப்பை பாதியில் விட்ட ஜாய் ஆலுக்காஸ், போர்ப்ஸ் அண்மையில் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியிலில் 50வது இடத்தை ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜாய் ஆலுக்காஸ் பிடித்துள்ளார்.

ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸின் தந்தை வர்கீஸ் ஆலுக்காஸ். 1956ல் கேரள மாநிலம் திருச்சூரில் முதல் நகை கடையை திறந்தார். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய ஜாய் ஆலுக்காஸ் தந்தையுடன் கடையில் இருந்து தொழிலை கற்றுக் கொள்கிறார்.
ஒரு கட்டத்தில் நாம் ஏன் வெளிநாட்டில் கடையை திறக்க கூடாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்படுகிறது. தனது எண்ணத்தை செயல்படுத்தவும் தொடங்கினார். 1987ல் அபுதாபிக்கு சென்று குடும்பத்தின் முதல் வெளிநாட்டு கடையை திறந்தார். தனது சொந்த ஜாய் ஆலுக்காஸ் பிராண்டை தொடங்கினார்.
தற்போது ஜாய் ஆலுக்காஸ் குழுமம் இந்தியா மற்றும் 60 நாடுகளில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் உலகின் மிகப்பெரிய தங்க நகை வி்ற்பனை நிலையத்தை ஜாய் ஆலுக்காஸ் கொண்டுள்ளது.
ஜாய் ஆலுக்காஸ் குழுமம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.14,513 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.899 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகவும் ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளது.
போர்ப்ஸ் அண்மையில் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில், ஜாய் ஆலுக்காஸ் 19 இடங்கள் முன்னேறி 50வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் அவர் 69வது இடத்தில் இருந்தார்.
ஜாய் ஆலுக்காஸின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.38 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் ஜாய் ஆலுக்காஸ் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 130ஆகவும், வட இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஜாய் ஆலுக்காஸ் ஈடுபட்டு வருகிறார். ஜாய் ஆலுக்காஸின் மனைவி ஜாலி ஜாய், ஜாய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். அவருடைய மகன் ஜான் பால் சர்வதேச நகை வணிகத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.


Click it and Unblock the Notifications