ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு ஊழியரின் பல வருட அனுபவத்தையும், வேலைவாய்ப்பு திறனையும் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கி வரும் ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதுநாள் வரையில் தினமும் செய்யப்பட்டும் ஓரே மாதிரியான வேலைகளைத் தான் ஆட்டோமேட் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏஐ, சூப்பர்இன்டலிஜென்ஸ் நிலையை எட்ட துவங்கியிருக்கும் வேளையில் அடுத்த 5 வருடத்தில் அறிவுசார் ஊழியர்களின் வேலையை ஏஐ செய்யத் துவங்க உள்ளது.

இதனால் சுமார் 2.4 கோடி பேர் தங்களுடைய வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் என தற்போதைய ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படுவதாக ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.
மேலும் உலகளவில் அனைத்து நிறுவனங்களும் தற்போது ஊழியர்கள் செய்யும் வேலைகளை ஏஐ மூலம் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவது இதற்கு முக்கியமான காரணம் என ஜேபி மோர்கன் வெல்த் மேனேஜ்மென்ட் ரிப்போர்ட் கூறுகிறது.
இந்த அறிக்கையில் நிறுவனங்கள் தற்போது ஏஐ தொழில்நுட்பத்திற்காக செலவு செய்யும் பட்ஜெட்டில் பாதியை புதிய ஊழியர்கள் நியமிப்பதைத் தவிர்க்கவும், ஊழியர்களின் பணியை ஆட்டோமேட் செய்வதற்காக செலவு செய்தால், உலகளவில் இருக்கும் அறிவுசார் ஊழியர்களில் 1.3 சதவீதத்தை எளிதாக பணியில் இருந்து நீக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு மனித ஊழியர் செய்யும் பணியை செய்ய நிறுவனத்திற்கு 100 ரூபாய் செலவாகிறது என்றால் ஏஐ மூலம் செய்ய 50 ரூபாய் செலவு செய்தால் போதும் என்பதாலேயே ஒவ்வொரு நிறுவனமும் ஏஐ மூலம் அதிகளவிலான பணிகளை செய்து ஆட்டோமேட் செய்து வருகிறது, இதேபோல் பணிநீக்கமும் செய்து வருகிறது.
தற்போது நிறுவனங்கள் அதிகளவில் காலியாக இருக்கும் ஊழியர்களின் இடத்தை நிரப்பவும், புதிதாக தேவைப்படும் ஊழியர்களின் பணியை ஆட்டோமேட் செய்து புதிய நியமனங்களைத் தவிர்க்கவும் தான் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் திறன்வாய்ந்த் இடத்தை ஏஐ கைப்பற்றினால் அந்த துறைக்கோ அல்லது பகுதிக்கோ பெரியளவிலான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்வோம் எனவும் இந்த அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்காவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் வேளையில், 3ல் 2 பேர் ஏஐ மூலம் மாற்றப்பட்டால் வருடத்திற்கு 30 லட்சம், 6 வருடத்தில் சுமார் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என இந்த அறிக்கையில் கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
