உலகின் முன்னணி எண்டர்பிரைஸ் சாப்ட்வேர் சேவை நிறுவனமான SAP, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக மற்ற டெக் நிறுவனங்களை போலவே பெரும் பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது.
SAP நிறுவனம் தனது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 10000 பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒரு பணிநீக்கத்தின் மூலம் சுமார் 9 சதவீத ஊழியர்களை SAP குறைக்க முடிவு செய்துள்ளது.

SAP ஐரோப்பிய நிறுவனம் என்பதால் பணிநீக்கம் குறித்து லேபர் யூனியன்களிடம் ஆலோசனை செய்த பின்பு தான் முழுமையான எண்ணிக்கை தெரிய வரும். இதனால் 10000 ஊழியர்கள் பணிநீக்கம் என்பது உறுதியான எண்ணிக்கையில்லை, இது மாறக்கூடும்.
மேலும் SAP ஐரோப்பிய சந்தையில் செய்யப்படும் பணிநீக்கத்திற்கு மட்டுமே லேபர் யூனியன்களிடம் அனுமதி வாங்க வேண்டும், பிற நாடுகளில் செய்யப்படும் பணிநீக்கத்திற்கு எவ்விதமான அனுமதியும் தேவையில்லை என்பதால் எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கத்தை துவங்கலாம் என்ற நிலை உள்ளது.
ஐரோப்பாவிலேயே அதிக மதிப்புடைய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் SAP நிறுவனத்தின் சிஇஓ நிறுவனத்தை AI-first strategy ஆடிப்படையில் மாற்ற வேண்டும் என அறிவித்து சில முக்கியமான மாற்றங்களை செய்தார், இதன் வாயிலாக 2026ல் மட்டுமே 2 முறை நிர்வாக குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
இதோடு SAP நிறுவனத்தின் 6ல் 2 நிர்வாக குழு உறுப்பினர்கள் நிர்வாக குழுவை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் SAP நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழு நிறுவனத்தில் எந்த பிரிவில் செலவுகளையும், ஊழியர்களையும் குறைக்கலாம் என்பதை கேட்டுள்ளது.
இதோடு ப்ராடெக்ட், இன்ஜினியரிங் மற்றும் சேல்ஸ் பிரிவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் SAP நிறுவனத்தின் ப்ராடெக்ட் லீட் ஆக இருக்கும் Muhammad Alam தனது பணிக்கான ஒப்பந்தத்தை நீட்டிக்காத நிலையில் மார்ச் மாதம் வெளியேற உள்ளார், இதற்கிடையில் இவரின் பணிகள், பொறுப்புகள் பெரும்பாலானவற்றை சிஇஓவான Christian Klein ஏற்றுள்ளார்.
இதேபோல் SAP நிறுவனத்தின் சேல்ஸ் பிரிவின் தலைவரான Thomas Saueressig கடந்த வாரம் Ionos குரூப்-ன் சிஇஓ-வாக செல்ல முடிவு செய்த காரணத்தால் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார்.
SAP நிறுவனம் உலகளவில் சுமார் 1,10,000 ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்தியாவில் மிகப்பெரிய அலுவலகம், ஊழியர்கள் படையுடன் SAP இயங்கி வருகிவது குறிப்பிடத்தக்கது. தற்போது SAP நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தால் மட்டும் அல்லாமல் நிர்வாக அளவிலும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
