அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் முகேஷ் அம்பானி.. ஜியோ மேஜிக் காணாமால் போனது..!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த Shein நிறுவனம், மத்திய அரசின் சீனா நிறுவனங்கள் மீதான தடையின் காரணமாக 2020ல் நாட்டை விட்டு வெளியேறியது. இந்திய இளம் தலைமுறையினர் மற்றும் ஃபாஸ்ட் பேஷன் பிரிவில் உலகம் முழுவதும் கொடிக்கட்டி பிறக்கும் Shein நிறுவனத்தை இந்தியாவுக்கு அழைத்து வர முடிவு செய்த முகேஷ் அம்பானி, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமானது.

இந்தியாவில் ஃபாஸ்ட் பேஷன் பிரிவில் டாடா குழுமத்தின் ஜூடியோ, மேக்ஸ் பேஷன், ஆதித்யா பிர்லாவின் பான்டலூன்ஸ் போன்றவை அசத்தி வரும் வேளையில் ரிலையன்ஸ் இப்பிரிவில் Shein நிறுவனத்தின் மூலம் அடைய திட்டமிட்டது.

 அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் முகேஷ் அம்பானி.. ஜியோ மேஜிக் காணாமால் போனது..!

ஆனால் ரிலையன்ஸ்-ன் கூட்டணியில் Shein 2020களில் இருந்த வரவேற்பைப் பெற முடியவில்லை, இதேபோல் சப்ளை செயினிலும் பலக்கட்ட பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வருகிறது.

மேலும் Shein நிறுவனத்தின் சிறப்புமிக்க தொழில்நுட்பம் இல்லாதது, உயர்மட்ட நிர்வாகத்தில் நிலையற்ற தன்மை ஆகியவை இக்கூட்டணியின் முயற்சியை பெரும் தோல்விக்கு தள்ளியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read

குறிப்பாக இத்தளத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் இருந்து 60 லட்சம் அளவிலேயே இருந்து வருகிறது. இந்த ஃபாஸ்ட் பேஷன் பிரிவில் ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கும் மிந்திரா நிறுவனம் வருடத்திற்கு 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் Shein நிறுவனம் 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் வைத்திருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இந்த 60 லட்சம் வாடிக்கையாளர் என்பது மிகவும் குறைவாகும்.

சீன நிர்வாகத்தின் கீழ் இந்தியாலில் Shein நிறுவனம் இயங்கி வந்த போது, இத்தளத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் தற்போது பெரும்பாலான பொருட்கள் மற்ற பிராண்டெட் கடைகளில் இருப்பது போலவே இருக்கும் காரணத்தால் பழைய வாடிக்கையாளர்களை பெற முடியாமல் Shein நிறுவனம் தவிக்கிறது.

Shein நிறுவனம் தற்போது ஈஷா அம்பானி கூட்டணியில் இயங்கி வரும் வேளையில் இப்பிரிவு வர்த்தகத்தின் தோல்வி என்பது பெரும் பின்னடைவாக விளங்குகிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜப்பான் நாட்டின் 7Eleven கடைகளை மூடுவதாக அறிவித்தது, பெரும் நம்பிக்கையுடன் ரிலையன்ஸ் கூட்டணியில் வந்த நிறுவனத்திற்கு மீண்டும் தோல்வி மட்டுமே மிஞ்சியது.

இதன் மூலம் கன்ஸ்யூமர் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+