டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவில் வெடித்து வரும் அதிகாரித்தை கைப்பற்றம் போராட்டம் தற்போது போர்ட் ரூம் தாண்டி நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் சார் தோராப்ஜி டாடா டிரஸ்ட், ஆர்டி டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டு அறக்கட்டளைகளும் டாடா குடும்பத்தின் டாடா டிரஸ்ட் சார்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக மீண்டும் என்.சந்திரசேகரன் அவர்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள வேளையில் இந்திய கார்ப்ரேட் துறையில் முக்கியமான நாளாக மாறியுள்ளது.
டாடா குழும விவகாரம் குறித்து இக்குழுமத்தின் தலைவர்கள் ஏற்கனவே அமித் ஷா உட்பட பல தலைவர்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்த நிலையில், சமீபத்தில் ராகுல் காந்திக் கூட டிவிட்டரில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
சந்திரசேகரனின் நியமனத்தில் என்ன பிரச்சினை?
டாடா சன்ஸ் தலைவராக பலக்கட்ட விவாதத்திற்கு பின்பு இந்நிறுவனத்தின் ஐபிஓ-வை கருத்தில் கொண்டு மீண்டும் சந்திரசேகரனை 5 ஆண்டுக்கு சேர்மனாக செப்டம்பர் 17ஆம் தேதி நியமிக்க அதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் Articles of Association-ல் உள்ள விதி 121-ன்படி நிர்வாக முடிவுகளில் தேவையான ஆதரவு வாக்குகள் இல்லாத காகணத்தால் நியமனம் குறித்த முடிவு செல்லாது என டாடா டிர்ஸ்ட் சார்ப்பில் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இதற்கு தீர்வு காண தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இன்று சார் தோராப்ஜி டாடா டிரஸ்ட், ஆர்டி டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டு அறக்கட்டளைகளும் தனித்தனியாக வழக்கு தொடுத்துள்ளது. சந்திரசேகரனின் மறுநியமனம் தொடர்பாக நோயல் டாடா மற்றும் வேணு ஸ்ரீனிவாசன் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.
சந்திரசேகரனின் மறுநியமனம் தொடர்பான வாக்கெடுப்பில் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருக்கும் நோயல் டாடா மறுக்கவும், வேணு ஸ்ரீனிவாசன் ஆதரவு தெரிவிக்கையில், இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஹரிஷ் மன்வானி தனது Casting Vote அதிகாரத்தை பயன்படுத்தி மறுநியமனத்திற்கு ஆதரவாக முடிவு செய்தார்.
இந்த நிலையில் இந்த நியமனத்திற்கு டாடா டிர்ஸ்ட் அமைப்பில் இருக்கும் நோயல் டாடா, அவரது மகன் நெவில் டாடா, மற்றொரு இயக்குனரான பாஸ்கர் பட் ஆகியோர் வழக்கு தொடர வேண்டும் என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இன்று வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு தொடுக்க விஜய் சிங் மற்றும் வேணு ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் டாடா சன்ஸ் மற்றும் அதன் 6 இயக்குநர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு டாடா டிரஸ்ட் அமைப்பு மொத்தம் 65 கோடி இழப்பீடு மற்றும் இதற்காக 18 சதவீத வட்டியும் இந்த வழக்கின் வாயிலாக கோரப்பட்டுள்ளது.
நாளை இந்த வழக்கை நீதிபதி அபய் அஹுஜா வெள்ளிக்கிழமை விசாரிக்கிறார்.


Click it and Unblock the Notifications
