சமீபகாலமாக அதிகரித்து வரும் மோசடிகள் குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். அப்பாவி மக்களின் பணத்தை பறிப்பதற்காக புதுப்புது யுக்திகளை கையாண்டு மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இன்றெல்லாம் சில மொபைல்களில் ஸ்பேம் கால் என்ற பெயருடன் அழைப்பு வருகிறது. இதனால் பயனர்கள் தெரிந்து கொண்டு.. இது போன்ற அழைப்புகளை பிளாக் செய்து விடுகின்றனர். ஆனால் இந்த விஷயம் தெரியாமல் இருக்கும் பலர் இது போன்ற மோசடிகளில் சிக்கி தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து வருகின்றனர்.
ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம்: பணத்தை பறிப்பதற்காக பல யுக்திகளை கையாளுகின்றனர். அப்படி புதிதாக தற்போது ஒரு யுத்தியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதுதான் ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம். இந்த ஜம்ப்ட் டெபாசிட் ஸ்கேம் என்பதைப் பயன்படுத்தி யூபிஐ பயனர்களுக்கு ஒரு சிறு தொகையை அனுப்புகின்றனர்.

அதன் பிறகு அந்தத் தொகையை மீண்டும் அனுப்பும் படி கோரிக்கை விடுகின்றனர். இந்த எதிர்பாராத வரவு காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தங்கள் வங்கி கணக்கின் பேலன்ஸை சரிபார்க்கின்றனர். அப்போது வங்கி விவரங்களை திறந்து தங்களது தனிப்பட்ட அடையாள எண் போன்ற விவரங்களை வழங்க பணம் அனுப்ப வேண்டி இருக்கிறது. அதோடு மோசடியாக அனுப்பப்பட்ட பணம் அங்கீகரிக்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி பிறரின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்டு கொள்ளையடிக்கின்றனர். எனவே தமிழ்நாடு குற்றபிரிவு போலீசார், ஆள் பேர் தெரியாத நபர்களிடமிருந்து பணம் அனுப்பப்பட்டால் எச்சரிக்கையாக இருக்கும் படி கூறியுள்ளனர்.
இந்த புதிய மோசடி குறித்து பல்வேறு புகார்கள் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் பதிவாகியுள்ளன. அதோடு தற்போது வங்கியின் பரிவர்த்தனை விவரங்களை டிராக் செய்து அதை வைத்து அழைப்பு விடுத்து இல்லாத தவறை செய்ததாக கூறி செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எனவே உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை பத்திரமாக வைத்திருங்கள். டிஜிட்டல் அரெஸ்ட் போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அவற்றை பிளாக் செய்து ரிப்போர்ட் செய்யுங்கள்.
எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?: UPI பயனர்கள் ஜம்ப்ட் டெபாசிட் மோசடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள 2 விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். உங்கள் வங்கி கணக்கில் வழக்கத்திற்கு மாறாக டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை கண்டால், பேலன்ஸை சரி பார்க்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். ஏனெனில் பணம் திரும்ப பெறுவதற்கு ஏதேனும் கோரிக்கைகள் வந்தால் அவை சற்று நேரத்தில் காலாவதியாகி விடும். அதன் பிறகு நீங்கள் உங்கள் பாலன்சை சரி பார்க்கலாம். கூடுதலாக உங்கள் கணக்கில் எதிர்பாராத அல்லது திடீர் கிரெடிட்-ஐ கண்டால் உடனடியாக அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம் அல்லது சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளியுங்கள்.


Click it and Unblock the Notifications