தமிழ்நாட்டில் கடந்த 2 வர்த்தக நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஆபரண தங்கத்தின் விலை என்ன, வெள்ளி விலை மாற்றம் அடைந்து இருக்கிறதா என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 13,370 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் ஒரு சவரன் என பார்க்கும்போது 560 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,06,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னை மட்டுமில்லாமல் கோவை, மதுரை,திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரதான நகரங்கள் எங்கும் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த வாரம் ஆறு வர்த்தக நாட்களில் ஒரு நாள் தங்கம் விலை மாறவில்லை, 3 நாட்கள் விலை குறைந்தது, 2 நாட்கள் விலை உயர்ந்தது. இந்த வார தொடக்கமே விலை குறைவில் தான் தொடங்கியுள்ளது என்பதால் இதே நிலை நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஜூன் மாதத்தை பொறுத்தவரை தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத சரிவை சந்தித்தது. அந்த வகையில் ஜூன் 25ஆம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 13,140 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்தது. இந்த மாதத்தின் பெரும்பாலான நாட்கள் விலை குறைந்திருப்பதால் மாதம் முடிய இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் அந்த மேஜிக் தொடருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. தற்போதும் கூட தங்கம் விலை சவரனுக்கு வரலாற்று உச்சபட்ச விலையை விட 26,000 ரூபாய் சரிவில் தான் இருக்கிறது.
24 கேரட் மற்றும் 18 கேரட் தங்கமும் இன்றைய தினம் விலை குறைந்துள்ளன. 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 14,509 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1,45,090 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,125 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 89,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் இன்றைய தினம் மாற்றம் இல்லை ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையான ஒரு கிலோ 4.25 லட்சம் ரூபாயில் இருந்து 1,80,000 ரூபாய் விலை சரிவில் தான் இருக்கிறது. தங்கம், வெள்ளி வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், முதலீடு செய்ய காத்திருந்தவர்களுக்கு தற்போதைய விலை நிலவரம் சிறந்த வாய்ப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

