ஒரு வாரத்தில் உலகின் பல மத்திய வங்கிகள் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில், சர்வதேச முதலீட்டுச் சந்தைகளில் கடுமையான பாதிப்பு உருவானது.
இதனால் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு வர்த்தக நாளில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமாப் 5.78 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீட்டு மதிப்பை இழந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு வெள்ளிக்கிழமை மட்டும் 461.22 புள்ளிகளையும், வியாழக்கிழமை வர்த்தகத்தில் 878.88 புள்ளிகளையும் இழந்து 2 நாளில் 61,337.81 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் இரண்டு நாட்களில் 1,340.1 புள்ளிகளை இழந்து அதாவது 2.13 சதவீதம் சரிந்துள்ளது.
சந்தை மூலதன மதிப்பு
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 2,85,46,359.06 கோடி ரூபாயில் இருந்தது 5,78,648.39 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
பெடரல் ரிசர்வ்
அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் கடந்த 4 நாணய கொள்கை கூட்டத்தில் தலா 0.75 சதவீத வட்டி விகிதத்தை உயர்த்தி வந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே ஜெரோம் பவல் கூறியது போல் வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைத்து பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஐரோப்பா, இங்கிலாந்து
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) மற்றும் பாங்க் ஆப் இங்கிலாந்து (BoE) ஆகியவை தத்தம் நாட்டில் உருவாகியுள்ள பணவீக்கம், வர்த்தகப் பாதிப்புகளைச் சரி செய்ய மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில் 0.50 சதவிகிதம் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியது.
பணவீக்கம்
பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் தீவிரமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை, தங்க முதலீட்டுச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தைக்குத் திரும்பியதால் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது.
ரீடைல் பங்கு முதலீட்டாளர்கள்
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.44 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.96 சதவீதமும் சரிந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து முக்கிய வர்த்தகத் துறை குறியீடுகளும் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிந்ததால் 2 நாள் வர்த்தகத்தில் ரீடைல் பங்கு முதலீட்டாளர்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளனர்.
முக்கியத் துறை
ரியல் எஸ்டேட் 1.57 சதவீதம் சரிந்தது, நுகர்வோர் துறை குறியீடு 1.36 சதவீதம் சரிந்தும் , தொழில்துறைகள் குறியீடு 1.32 சதவீதம் சரிந்தும் , மூலதன பொருட்கள் குறியீடு 1.26 சதவீதம் சரிந்தும் , டெக் குறியீடு 1.25 சதவீதம் சரிந்தும் , ஐடி குறியீடு 1.24 சதவீதம் சரிந்தும் மற்றும் ஆட்டோ குறியீடு 1.13 சதவீதம் சரிந்தும் .
முக்கிய நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 3.62 சதவீதம் சரிந்து அதிகப்படியான பாதிப்பை வெள்ளிக்கிழமை எதிர்கொண்டது.இதை தொடர்ந்து மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனங்கள் ஆகியவை அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. இதேவேளையில் ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்யுஎல், நெஸ்லே மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் லாபத்துடன் முடிவடைந்தன.


Click it and Unblock the Notifications