தங்கத்துடன் போட்டி போட்ட காஜூ கத்லி: தீபாவளி ஷாப்பிங்கில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்..!!

தீபாவளி பண்டிகைக்கு இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகமாக குயிக் காமர்ஸ் செயலிகளான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் , செப்டோ மற்றும் பிளிப்கார்ட் மினிட்ஸ் ஆகியவற்றின் மூலமாகவே போட்டி போட்டு கொண்டு பொருட்களை வாங்கியுள்ளனர். பூஜைக்கு தேவையான பூக்களில் தொடங்கி தங்கம் , வெள்ளி நாணயங்கள் வரை குயிக் காமர்ஸ் செயலிகளில் விற்பனை களைகட்டியுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி நாளில் மக்கள் எந்த பொருட்களை அதிகமாக ஆர்டர் செய்தனர் என்ற தகவல்களை இந்த தளங்கள் வெளியிட்டுள்ளன. இதன்படி தீபாவளி ஸ்வீட் விற்பனையில் பாரம்பரிய சோன் பாப்டியை பின்னுக்குத் தள்ளி காஜு கத்லி (Kaju Katli) எனப்படும் முந்திரி கேக் இன்ஸ்டாமார்ட் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தங்கத்துடன் போட்டி போட்ட காஜூ கத்லி: தீபாவளி ஷாப்பிங்கில் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்கள்..!!

இதற்கு அடுத்தபடியாக மோதிசூர் லட்டு, பேஷன் லட்டு , மைசூர் பாக், சோன் பாப்டி, பேடா மற்றும் குலாப் ஜாமுன் ஆகிய இனிப்புகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக குயிக் காமர்ஸ் தளங்களில் இனிப்பு வகைகளின் ஆர்டர்கள் 55 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. செப்டோவில் லட்டு ஆர்டர்கள் தான் முதலிடம் பிடித்துள்ளன.

தீபாவளி பண்டிகையின் முந்தைய நாள் இரவில் மளிகை பொருட்கள் அல்லாத பிரிவில் Diet Coke மிக அதிக அளவில் விரும்பப்பட்ட மற்றும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளாக உருவெடுத்துள்ளது. மேலும் Party-planning ஆர்டர்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 162 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் தின்பண்டங்கள் மற்றும் ஸ்நாக்ஸ்கான தேவை 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

Also Read

இந்த தீபாவளி பண்டிகையின் போது குயிக் காமர்ஸ் தளங்கள் மூலம் மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர். செப்டோ தளம் ஒரு மணி நேரத்திற்கு 14,000-க்கும் அதிகமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் டெலிவரி என்ற வீதத்தில் இவற்றை டெலிவரி செய்துள்ளது. இன்ஸ்டாமார்ட்டும் தங்கம், வெள்ளி நாணயங்களுக்கான ஆர்டர்கள் இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்தது என தெரிவிக்கிறது.

தீபாவளிக்கு வாங்கப்பட்ட தங்க நாணயங்களில் மூன்றில் இரண்டு பங்கு ரோஜா அல்லது மலர் வடிவங்களாகவும், வெள்ளி நாணயங்களில் 73 சதவீதம் லட்சுமி - கணேஷ் வடிவங்களாகவும் இருந்துள்ளன. மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் லட்சுமி - கணேஷ் மற்றும் தாமரை வடிவ தங்க நாணயங்களை உள்ளடக்கிய நாணயங்களை 1.11 லட்சம் ரூபாய்க்கு ஒரே பில்லில் ஷாப்பிங் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.

Recommended For You

ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் நொய்டாவை சேர்ந்த வாடிக்கையாளர்களும் ஆயிரக்கணக்கில் தங்கம், வெள்ளி நாணயங்களுடன் வீட்டு உபயோகப் பொருட்கள், ஏர் பியூரிஃபையர்கள் போன்றவற்றை ஒரே ஆர்டராக வாங்கியுள்ளனர்.

பெருநகரங்கள் மட்டுமின்றி, சிறு நகரங்களும் இந்த தீபாவளி ஷாப்பிங் போட்டியில் முன்னணியில் இருந்தன. இன்ஸ்டாமார்ட் தரவுகளின்படி ராய்ப்பூர் , மதுரை , குவகாத்தி , த்ரிசூர் மற்றும் கொல்லம் ஆகிய நகரங்கள் தீபாவளி தேவைகளுக்கான ஆர்டர்களில் முன்னிலை வகித்தன. குறிப்பாக பூஜை பொருட்கள், துணி மணிகள் , டிரை ஃப்ரூட் பாக்ஸ்கள் அதிகமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

நவம்பர் 8 அன்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை அதிகபட்ச ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளன. குறிப்பாக காலை 11:18 மணிக்கு ஒரே நிமிடத்தில் மிக அதிகமான ஆர்டர்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையானது, இந்தியா ஷாப்பிங் செய்யும் முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. மக்கள் தங்களின் அன்றாட மளிகை பொருட்களை போலவே, தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த இனிப்புகள் மற்றும் ஆடம்பர பொருட்களையும் சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் குயிக் காமர்ஸ் தளங்கள் மூலமாகவே நம்பிக்கையுடன் ஆர்டர் செய்து பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+