சென்னை: சிறு சேமிப்புகள் என வந்துவிட்டாலே நம்ம வீட்டு பெண்களை யாராலும் அடிச்சக்க முடியாது. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சிறுக சிறுக தொகை நகை சீட்டாகவோ மற்ற சீட்டுகளாகவோ சேமித்து வைப்பது பெண்களின் பழக்கமாக இருக்கிறது. பின்னர் வீட்டிற்கோ அல்லது குழந்தைகளுக்கோ ஒரு தேவை என வந்தால் அந்த பணத்தை எடுத்து பயன்படுத்துவார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழக அரசு வழங்கி வரும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையை பல ஆயிரம் பெண்கள் எடுக்காமல் அப்படியே சேமித்து வைப்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணமானது நேரடியாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
ரேஷன் அட்டை அடிப்படையில் குடும்ப உறுப்பினர்களின் வருமானம் கணக்கீடு செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 1.15 கோடி மகளிருக்கு, அவர்களின் வங்கி கணக்கில் மாதம் 1,000 ரூபாயை, தமிழக அரசு வரவு வைத்து வருகிறது. இதில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்க கூடிய 9 லட்சம் மகளிருக்கு, மாதம் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த 9 லட்சம் பேரில் 50,000 பேர், மாதந்தோறும் வரும் பணத்தை செலவு செய்யாமல், சேமிப்பாக வரவு வைத்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல, மற்ற வங்கிகளில் கணக்கு வைத்துள்ள பெண்களும் கூட அரசு வழங்கும் 1,000 ரூபாயை செலவு செய்யாமல் சேமிக்கிறார்களாம். பொதுவாக வங்கிகளில் கூட நாம் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு ஒவ்வொரு காலாண்டிற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டி கிடைக்கும். அது மட்டுமின்றி ஆர்டி உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களும் பெண்களுக்கு கிடைக்கின்றன.
பல இடங்களில், நகைக் கடைகளில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டங்களில் இந்த 1000 ரூபாயை முதலீடு செய்து நகையாக வாங்கியுள்ளனர். அந்த வகையில் அரசு வழங்க கூடிய 1000 ரூபாய் தொகையானது சேமிப்பு, முதலீட்டை நோக்கியும் பெண்களை நகர செய்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications